திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தினம் ஒரு உடல் நல விழிப்புணர்வு ஏற்பாடு

......................................................

Posted on :24 December ,2018 06:47:00
News Image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தினம் ஒரு உடல் நல விழிப்புணர்வு ஏற்பாடு 

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தினம் ஒரு உடல் நல விழிப்புணர்வு வரும் 26 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மைய நூலகர் சிவகுமார் அறிவிப்பு செய்துள்ளார். 

திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் இந்திய மருத்துவம், ஹோமியோபதித்துறை சார்பில் 2 வது தேசிய சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 26 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். 

இதில் 26 ம் தேதி சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், ' சித்த மருத்துவம் ஒரு பார்வை' என்ற தலைப்பிலும், 27 ம் தேதி சித்த மருத்துவர் அன்பரசு,' மூட்டு வலிகள் பிரச்சினைக்கு நிவாரணம்' என்ற தலைப்பிலும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

வரும் 29 ம் தேதி சித்த மருத்துவர் கவிதா,' நுரையீரல்' தொடர்பாகவும், 30 ம் தேதி சித்த மருத்துவர் சபரிநாதன்,' வயிறு' தொடர்பாகவும், 31 ம் தேதி சித்த மருத்துவர் தமிழ்கனி,' இதயம், சிறுநீரகம்' தொடர்பாகவும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் நலப்பிரச்சனைகள் குறித்து சந்தேகம் கேட்டு ஆலோசனை பெற்று பயனடையலாம். இவ்வாறு மாவட்ட மைய நூலகர் சிவகுமார் அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>