......................................................
மாமா மச்சான் தயவால் மாப்பிள்ளை கவுன்சிலர் ஆவாரா? துறையூரில் அரசியல் பேச்சு
திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அம்மன் பாபு திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவில் உள்ள மாமா, பாஜகவில் உள்ள மச்சான் தயவால் மாப்பிள்ளை கவுன்சிலர் ஆவாரா என பேச்சு எழுந்துள்ளது.
தேமுதிக பிரமுகர் அம்மன் பாபு துறையூரை சேர்ந்தவர். விஜயகாந்தின் தீவிர ரசிகரான இவர் கட்சியில் மாவட்ட பொருளாளர், அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக களம் இறங்கினார். முந்தைய உள்ளாட்சித்தேர்தலில் துறையூர் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக நகர செயலாளர் முரளியை எதிர்த்து களம் இறங்கினார். இரண்டு தேர்தலிலும் பெரும் செலவு செய்து கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித்தேர்தல் நடத்த வார்டு மறு வரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துறையூர் நகராட்சி 22 வது வார்டில் அம்மன் பாபு மாமானார் சுகுமாருக்கு கடந்த முறை திமுக வாய்ப்பு தரவில்லை. இதனால் கடந்த முறை அம்மன் பாபு மச்சினன் மணி பாஜகவில் வேட்பாளராக அறிவித்து மனு தாக்கல் செய்தார். தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு மணி வார்டில் பணி செய்து வந்தார். தற்போது திமுகவில் இணைந்துள்ள அம்மன் பாபு அதே 22 வது வார்டில் வியாபாரம் செய்து வருகிறார். அவர் திமுகவில் வார்டு கவுன்சிலர் சீட்டு கேட்டு விண்ணப்பித்தால் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டாக வார்டில் பணி செய்து வந்த அம்மன் பாபு மச்சினன் மணி அவதிப்படுவதாக பாஜகவினர் தெரிவித்தனர். மாமா, மச்சான் தயவால் மாப்பிள்ளை அம்மன் பாபு கவுன்சிலர் ஆகும் வாய்ப்பு உள்ளதா என துறையூரில் பேசப்படுகிறது.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy