50 ரூபாய் கோலம் 5 ஆயிரம் ரூபாய் பரிசு

......................................................

Posted on :21 December ,2018 10:04:30
News Image

50 ரூபாய் கோலம் 5 ஆயிரம் ரூபாய் பரிசு 23 ம் தேதி பதிவு செய்யுங்க...

துறையூர் ரோட்டரி சங்கம் புத்தாண்டு மற்றும் மார்கழியை ஒட்டி நடத்தும் ரங்கோலி கோலப்போட்டியில் பங்கேற்க வரும் 23 ம் தேதி ரூ 50 செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. 

துறையூர் ரோட்டரி சங்கம் மகளிருக்கு ரங்கோலி மற்றும் கோலப்போட்டியை வரும் 25 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்த உள்ளது. இப்போட்டியில் சமுதாயத்தில் ரோட்டரியின் பங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உழவு தொழில், மகளிர் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ரங்கோலி கோலம் போட வேண்டும். போட்டியில் 100 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும். எனவே போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 23 ம் தேதி பள்ளி வளாகத்தில் ரூ 50 பதிவு கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ளவும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 2 வது பரிசு ரூ 4 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 3 வது பரிசு ரூ 2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், 4 வது பரிசு ரூ ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், ஆறுதல் பரிசு 10 பேருக்கு ரூ 500 மதிப்புள்ள பொருட்கள் மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். போட்டி ஏற்பாடுகளை சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் நடராஜன், திட்ட தலைவர் விஸ்வநாதன், திட்ட செயலாளர் நடராஜா,ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>