துறையூர் பெருமாள்மலையில் மூலவருக்கு முத்தங்கி உற்ஸவருக்கு கருட சேவை

......................................................

Posted on :19 December ,2018 11:34:14
News Image

 துறையூர் பெருமாள்மலையில் மூலவருக்கு முத்தங்கி உற்ஸவருக்கு கருட சேவை

தென் திருப்பதி எனும் துறையூர் பெருமாள்மலை மீது ஸ்வாமி வைகுந்த ஏகாதசியன்று மூலவருக்கு முத்தங்கி, உற்ஸவருக்கு கருட சேவையில் எழுந்தருளி காட்சி அளித்தனர். 

தென் திருப்பதி என போற்றப்படும் துறையூர் பெருமாள்மலை மீது ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமி திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி காட்சி தருகிறார். மலை மீதுள்ள இக்கோயிலில் தினமும் அதிகாலை முதல் மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே வந்து ஸ்வாமி தரிசனம் செய்து பக்தர்கள் கீழே வந்து விடுகிறார்கள். இக்கோயில் மூர்த்தியை குலதெய்வமாக கொண்டு பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து வழிபாடு செய்கிறார்கள். இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமை உற்ஸவம், திருத்தேர் உற்ஸவம், தமிழ் மாதப்பிறப்பு, பெளர்ணமி கிரிவலம் என விசேஷ வைபவம் நடைபெறும். 

பெருமாளுக்கு உகந்த வைகுந்த ஏகாதசி நாளில் இவ்வாண்டு முதல் முறையாக மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இந்த அலங்காரத்தில் வரும் 27 ம் தேதி வரை மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மாலை 6 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என்பதால் பக்தர்கள் 5 மணிக்குள் வந்து விடுவது நல்லது. 

கோயிலில் உள்ள உற்சவர் வைகுந்த ஏகாதசி நாளில் மாலை 5 மணிக்கு கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருளினார்.


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>