மண்ணில் கலந்த நெல்மணி

......................................................

Posted on :06 December ,2018 09:18:07
News Image

மண்ணில் கலந்த நெல்மணி

பாரம்பரிய நெல் மீட்ட ஜெயராமன் இயற்கையை நேசிக்கும் நெஞ்சத்து நினைவில் வாழும் அமரத்துவம் பெற்றார். 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்  (50). 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003 ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாதம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் இவர் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அன்று முதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், ஜெயராமனால் பாரம்பரிய நெல் மையம் உருவாக்கினார். இந்த மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆய்வு மையமாக திகழ்கிறது. இவர் பாரம்பரிய நெல்விதைகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறார். விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை  தொடர்பாக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்.

 இவரது பணிகளுக்காக விஜய் டிவியின் மாற்றம் தேவை நிகழ்ச்சி இவருக்கு இயற்கை விதை நெல் மீட்பாளர் விருதை வழங்கியது. இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும்,  இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான   விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது.

விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைப்பு செய்யவும்,நுகர்வோர்கள் அதனால் பயன்பெறுவது தான் நெல் ஜெயராமன் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>