பிளாஸ்டிக் இல்லாத திருச்சி மாவட்டமாக அனைவரும் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்

......................................................

Posted on :06 December ,2018 09:08:46
News Image

பிளாஸ்டிக் இல்லாத திருச்சி மாவட்டமாக அனைவரும் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள் 

திருச்சி மாவட்டத்தில் வரும் 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக திருச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்கு வணிக , கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுமக்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருச்சி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க சுற்றுச்சூழல் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை ,  உணவுததுறை , இந்துசமய அறநிலையத்துறை , சுகாதாரததுறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட  கலெக்டர் ராசாமணி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில்  கலெக்டர் பேசியதாவது: முதலமைச்சர் கடந்த 2018 ஜூன் 5 ம் தேதி சட்டப்பேரவையில் பிளாஸ்டிக் தடை குறித்து அறிவிப்பு செய்துள்ளார்.  அதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் ஆகிய நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது . அனைத்துத் துறை அலுவலர்களும் பிளாஸ்டி பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய இடங்கள் , கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் முன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் வரக்கூடிய தீங்குகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிைப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களாக வாழை இலை . பாக்குமர இலை .அலுமினியத்தாள் , காகித சுருள் . தாமரை இலை , உண்ணைக்கூடிய தேக்கரண்டிகள். கண்ணாடி உலோகத்தாலான குவளைகள், மூங்கில் மரம் , மண் பொருட்கள், காகித உறிஞ்சி குழாய்கள், துணி காகித சணல் பைகள், மண் குவளைகள் , காகித துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள் இவற்றை பொதுமக்கள் , வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயன்படுத்த வேண்டும்.

இம்மாத இறுதிக்குள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைதது பகுதிகளுக்கும் பிளாஸ்டிக் பொருட்களினால் வரும் தீமைகள் குறித்து முக்கிய இடங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்த வேண்டும் . மேலும் செய்தித்தாள், டிவி மற்றும் வானொலி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட வேண்டும்.

விழிப்புணர்வு வாயிலாகவும், டிவி வாயிலாகவும் , அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்ய வேண்டும் என்ற உத்தரவினை அறிவுறுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் .

ஒவ்வொரு துறை அலுவலர்களும் பிளாஸ்டிக் ஒழிப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் திருச்சி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக விளங்க அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பின்னர் திருச்சி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்குவது குறித்த “ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் சுறறுசசூழலைக் காப்போம்" பிளாஸ்டிக் கை பைகளை தவிர்ப்போம்!துணிைப் பைகளை பயன்படுத்துவோம்!! என்ற வாசகம் அடங்கிய துணிப்பையை கலெக்டர் வெளியிட மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் கோட்டப்பொறியாளர் (சுற்றுச்சூழல் துறை) லட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட மேலாளர்(டாஸ்மாக்) பாலசுப்ரமணியன், மகளிர் திட்ட அலுவலர் சரவணன் , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தண்டபாணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மணிமாறன், நகர்நல அலுவலர் டாக்டர்.ஜெகன்நாதன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>