குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ 53 லட்சம் நிவாரண உதவி தொகை கலெக்டர் வழங்கல்

......................................................

Posted on :04 December ,2018 08:50:38
News Image

குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ 53 லட்சம் நிவாரண உதவி தொகை கலெக்டர் வழங்கல் 

திருச்சி மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பயனாளிகளுக்கு ரூ 52 லட்சத்து 93 ஆயிரத்து 719 மதிப்பில் மாவட்ட கலெக்டர் ராசாமணி வழங்கினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விதவை , முதியோர் , இயற்கை மரணம், விபத்து நிவாரணம் , திருமண உதவித்தொகை, தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு ரூ 52 லட்சத்து 93 ஆயிரத்து 719 மதிப்பிலும் மற்றும் பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் ராசாமணி வழங்கினார்

சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முசிறி,திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு,மண்ணச்சநல்லூர்,  தொட்டியம்,மருங்காபுரி, லால்குடி ஆகிய வட்டத்தை சேர்ந்த 237 நபர்களுக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை தலா ரூ 1000 பெறுவதற்கான ஆணையினையும், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டம் மறறும் இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியாக ரூ 50 லட்சத்து 58 ஆயிரத்து 719 பெறுவதற்கான காசோலையும்  மாவட்ட கலெக்டர் வழங்கினார்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி , தாட்கோ மேலாளர் விஜயலெட்சுமி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>