பொன்மாணிக்கவேல் ஐஜி ஓராண்டு பதவி நீட்டிப்பு : நீதிமன்றம் உத்தரவு

......................................................

Posted on :30 November ,2018 16:55:15
News Image

பொன்மாணிக்கவேல் ஐஜி ஓராண்டு பதவி நீட்டிப்பு : நீதிமன்றம் உத்தரவு 

சிலைக்கடத்தல் வழக்கை விசாரித்த பொன் மாணிக்கவேல் ஐஜி இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் அவரது பதவியை ஓராண்டு நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க  பொன் மாணிக்கவேல் ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை ரயில்வே ஐஜியாக இருந்த அவரிடம் கடந்த ஜூலையில் கூடுதல் பொறுப்பை உயர் நீதிமன்றம் ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி சிலைக்கடத்தல்  வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், முக்கிய நபர்களையும் பாதுகாக்கும் உள்நோக்கத்துடன்  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து, செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த  மனுவை விசாரணைக்கு ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் ஆர்.மகாதேவன் அமர்வு, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த ஆணைக்கு ஆகஸ்ட் 7 ம் தேதி இடைக்கால தடைவிதித்தது.

இந்த வழக்கின் அனைத்து இறுதி வாதங்கள் கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில்,  சிலை கடத்தல் தொடர்பாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வழக்குகளை விசாரிக்க அங்குள்ள தூதரகங்களை அணுக சிபிஐ விசாரணை சரியாக இருக்கும் என்பதாலேயே சிபிஐக்கு மாற்றப்பட்டது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசு பிறப்பித்த உத்தரவு  முற்றிலும் தவறானது. உள்நோக்கம் இல்லை என அரசு தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த அரசாணை சட்டவிதிகளுக்கு புறம்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ளதால் அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில் பொன்மாணிக்கவேல் ஐஜி பணி காலம் நவம்பர் 30 ம் தேதி முடிந்து ஓய்வு பெற உள்ளது தெரியவந்தது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வக்கீல் ஸ்ரீதர் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

ரயில்வே ஐஜி பொறுப்பில் இருந்த பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் நேற்று அளித்த பிரிவு உபச்சார விழாவில், நேர்மையான அதிகாரிகள், இளைஞர்களை நம்பி எனது பணியை விட்டுச் செல்கிறேன் என பேசினார். 

இன்று சிலைக் கடத்தல் வழக்குப்பிரிவுக்கு அபய்குமார் சிங் ஐஜி தமிழக அரசு நியமனம் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ஓய்வுபெறவிருந்த பொன் மாணிக்கவேல் ஐஜியின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து அவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய, மாநில அரசுகள், சிபிஐயும் அவரது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பேட்டி அளித்த பொன்மாணிக்கவேல் ஐஜி, அனைத்து வழக்குகளிலும் தண்டனை பெற்று தரும் வகையில் திருச்சி, கும்பகோணத்தில் தங்கி செயல்படுவேன். இந்த பிரிவில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுவார்கள். கூடுதல் பொறுப்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது இதற்கு கூடுதல் சம்பளம் பெறவில்லை. ரயில்வே பிரிவு சம்பளம் மட்டும் பெற்றேன். இது எனது கடமை என கூறினார். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>