மர்ம விலங்கு குதறி 15 ஆடு இறப்பு ஆடு வளர்ப்போர் அச்சம்

......................................................

Posted on :25 November ,2018 21:09:44
News Image

 மர்ம விலங்கு குதறி 15 ஆடு இறப்பு ஆடு வளர்ப்போர் அச்சம் 

மண்ணச்சநல்லூர் அருகே பட்டியில் இருந்த 15 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தன. இதனால் ஆடு வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர். 

மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரமதி(65). இவர் தனது வீட்டருகே உள்ள பட்டியில் 15 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். தினமும் பகலில் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று இரவில் பட்டியில் அடைத்து தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். இன்று காலை வந்து பார்த்த போது 15 ஆடும் காயத்துடன் படுத்தவாறு இருந்தது கண்டு பதறினார். அவை இறந்து கிடப்பது அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் அழுதார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து இது குறித்து மண்ணச்சநல்லூர் வருவாய் துறை, போலீசார், கால்நடைத்துறைக்கு தகவல் தந்தனர். இறந்த ஆடுகள் ரூ 1.50 லட்சம் என மதிப்பிடப்பட்டது. இறந்த ஆடுகள் பரிசோதனை செய்து பார்க்க  அனுப்பப்பட்டுள்ளது. மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து போலீசார் கண்காணிப்பு செய்து வருகின்றனர். இறந்த ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. மர்ம விலங்கு நடமாட்டத்தால் ஆடுகள் வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர். 


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>