பொது நூலகத்துறை பணியாளர் கழக மாநில முப்பெரும்விழா திருச்சியில் ஏற்பாடு

......................................................

Posted on :25 November ,2018 11:35:53
News Image

பொது நூலகத்துறை  பணியாளர் கழக மாநில முப்பெரும்விழா திருச்சியில் ஏற்பாடு 

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழக சி & டி அமைப்பின் மாநில முப்பெரும்விழா திருச்சி தாஜ் திருமண மஹாலில் வரும் டிசம்பர் 7 ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் பணியாற்றும் ஊர்ப்புற நூலகர்கள் பெறும் சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 3 ம் நிலை நூலகர் பணியிடத்திற்கு ஊர்ப்புற நூலகர் பணியிடத்தை அறிவிக்க வேண்டும். நூலகர்களுக்கு 3 வகை இனங்களின் கீழ் வழங்கும் ஊதியத்தை ரத்து செய்து அனைத்து நூலகர்களுக்கும் ஒரே வகையில் ஊதியம் வழங்க வேண்டும். 6 வது ஊதியக்குழுவில் விடுபட்ட தர ஊதியத்தை கணக்கிட்டு புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் படி 2006 ம் ஆண்டு 3 ம் நிலை நூலகராக பணியில் சேர்ந்த அனைவருக்கும்  பழைய ஓய்வூதியம் வழங்க, காலியாக உள்ள டிஎல்ஒ பணியிடம் நிரப்பவும்,ஆய்வாளர், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பணியிடம் இல்லாத 16 மாவட்டத்தில் புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும்.அரசு ஆணையில் உள்ள தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில முப்பெரும்விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தாஜ் திருமண மஹாலில் வரும் டிசம்பர் 7 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

முப்பெரும்விழாவுக்கு கழக அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை வகிக்கிறார்.கரூர் மாவட்ட ஆலோசகர் சிவக்குமார், நாகை,திருவாரூர்,தஞ்சை,பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் நாகராஜ், அன்பரசு, பாலு, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கரூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் வரவேற்று பேச உள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலர் கழக சி& டி மாநில தலைவர் செளந்திரராஜன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், நூலகத்துறை பணியாளர் கழக மாநில தலைவர் ராஜேஷ்குமார் மறைந்த கழக நிர்வாகிகள் செந்தில்நாதன், வேலு ஆகியோர் குடும்பத்துக்கு நிதி வழங்கியும் பேச உள்ளனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கவும், திருச்சி மாவட்ட ஆலோசகர் சரவணம் நன்றியுரை ஆற்ற உள்ளார். அமைப்பின் திருச்சி,கரூர், தஞ்சை,பெரம்பலூர்,திருவாரூர்,நாகை மாவட்ட நிர்வாகிகள் முப்பெரும்விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>