10 ம் வகுப்பு தோல்வி அடைந்து 3 குழந்தை பெற்ற மேரிகோம் குத்து சண்டையில் சாதனை

......................................................

Posted on :25 November ,2018 02:08:52
News Image

10 ம் வகுப்பு தோல்வி அடைந்து 3 குழந்தை பெற்ற மேரிகோம் குத்து சண்டையில் சாதனை 

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் மேரிகோம் உலக சாதனை படைத்தார்.

அவர் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் விவசாய கூலி தொழில் செய்த பெற்றோருக்கு மகளாக பிறந்து, 10 ம் வகுப்பு தோல்வி அடைந்து, 3 குழந்தையை பெற்ற பிறகு இந்த உலக சாதனை படைத்ததால் கிராமத்தில் வாழும் இளைஞர்கள், பெண்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை பாயச் செய்துள்ளார்.

டில்லியில் நடக்கும் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரிகோம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

டில்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் கடந்த 15 ம் தேதி தொடங்கி உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 73 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். பரபரப்பான இத்தொடரில் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது.இப்போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனையும் 5 முறை உலக குத்துச்சண்டையில் தங்கப்பதக்கமும் வென்ற மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் தகுதிபெற்றிருந்தார். உக்ரைன் வீராங்கனை  ஹன்னாவுடன் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் களமிறங்கிய மேரிகோம் தனது திறமையை களத்தில் மற்றுமொருமுறை நிரூபணம் செய்து 5-0 என்ற புள்ளிக்கணக்கில் எதிராளியை எளிதில் வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப்பில் 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகசாம்பியன்ஷிப்பில் அதிக முறை தங்கப்பதக்கம் வென்றிருந்த அயர்லாந்தின் கேதி டெய்லரின் சாதனையை சமன் செய்தார். 

16 ஆண்டுகளுக்கு முன்னதாக கடந்த 2002ல் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் மேரிகோம் தங்கம் வென்றிருந்தார். கடைசியாக 2010ஆம் ஆண்டு தங்கம் வென்றார். தற்போது 8 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் தங்கம் வென்று தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார் மேரிகோம்.

3 குழந்தைகளுக்கு தாயான மேரிகோம், 35 வயதை கடந்தவர் ஆவார். 2012ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 6 தங்கம், ஒரு வெள்ளியும், ஆசியப் போட்டித்தொடரில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் மற்றும் ஆசிய உள்ளரங்கு தொடரில் தங்கமும் வென்றுள்ளார்.

இதுவரை ஆடவர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் கியூபா வீரர் ஃபெலிக்ஸ் சேவானும், மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் அயர்லாந்தின் கேதி டெய்லரும் மட்டுமே 6 முறை தங்கம் வென்றிருந்த நிலையில் தற்போது இந்த ஜாம்பவான்களின் வரிசையில் மேரிகோமும் இணைந்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மேரி கோம் நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். விளையாட்டுக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு மேரி கோம் ஒரு உதாரணமாக விளங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சுயசரிதை அன்பிரேக்கபுள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. சினிமாவாகவும் வெளிவந்துள்ளது. இவருக்கு விளையாட்டு வீரருக்கு வழங்கும் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருது மத்திய அரசு வழங்கியது.

இவரது வெற்றிக்கு அவரது தந்தையின் அனுபவம் கை கொடுத்துள்ளது என்று பல்வேறு தருணத்தில் தெரிவித்துள்ளார். 
Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>