கஜா புயல் கடந்து 9 ம் நாள் குடிநீர் மின்சாரம் இல்லாததால் மக்கள் ரோட்டில் 'குடியேற்றம்'

......................................................

Posted on :24 November ,2018 16:25:00
News Image

கஜா புயல் கடந்து 9 ம் நாள் குடிநீர் மின்சாரம் இல்லாததால் மக்கள் ரோட்டில் 'குடியேற்றம்'

திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் கடந்து 9 ம் நாளான இன்று மின்சாரம் இல்லாததால், குடிநீர் இல்லாமல் மக்கள் ரோட்டில் குடியேறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மணப்பாறை அடுத்த தொட்டியபட்டி ஊராட்சி நவலூரணிப்பட்டி புயலில் பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் கடந்து 9 நாள் ஆகியும் இங்கு மின்சாரம் இல்லாததால் குடிநீருக்கும் அவதிப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மணப்பாறை _ கோவில்பட்டி ரோட்டில் தொட்டியபட்டி என்ற இடத்தில் இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியது. மக்கள் மறியலை தொடர்ந்து இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகள் மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>