தினமணி நிருபர் ' சமுத்திரம் ' பிரியாவிடை

......................................................

Posted on :23 November ,2018 19:57:01
News Image


தினமணி நிருபர் ' சமுத்திரம் ' பிரியாவிடை 

திருச்சியில் காலைக்கதிர் , தினகரன்,  தினமணியில் நிருபராக பணிபுரிந்தவர் சமுத்திராஜன் (47). தினமணி திருச்சி பதிப்பு உதவி ஆசிரியராக இருந்த சமுத்திரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தர்மபுரி நிருபராக பணியிட மாற்றப்பட்டிருந்தார். அலுவலகத்தில் இன்று மாலை  பணியில் இருந்த போது மயக்கமடைந்த அவரை உடன் பணிபுரிந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டார் என கூறியுள்ளார். அவரது உடல் திருச்சிக்கு நள்ளிரவு கொண்டு வரப்பட்டது.  அங்கு பத்திரிக்கை நண்பர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சொந்த ஊரான நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.சமுத்திரராஜனுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். சமுத்திரராஜன் அவர்கள் சிறுகதை எழுதியுள்ளார். நாளிதழில் அவரது எழுத்து அவரை போலவே ' நிமிர்ந்து' இருக்கும். நவம்பர் 22 நாளிதழில் தர்மபுரி மாவட்டத்தில் பெருகும் வர்த்தகம், குடியிருப்புகள் என்ற சிறப்பு செய்தி கட்டுரையில் திட்டப்பணிகள் துரிதம் பெறுமா? என கேள்வியோடு துணை தலைப்பை அமைத்தது போல தனது வாழ்க்கையை நிறைவு செய்து பிரியாவிடை பெற்றாரோ?.

பாராபட்சமின்றி பழகும்       மனதில் பட்டதை பேசும்                       நல்ல நண்பருக்கு                     www.livetrichy.com தனது                        இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறது.


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>