கொப்பம்பட்டி வேதாரண்யத்திற்கு நிவாரண உதவி

......................................................

Posted on :23 November ,2018 17:44:03
News Image

கொப்பம்பட்டி  வேதாரண்யத்திற்கு நிவாரண உதவி 

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, மருங்காபுரி உள்ளிட்ட தாலுகாக்கள் அருகாமை ஊர்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட, மாநகராட்சி சார்பில் டெல்டா மாவட்ட  சீரமைப்பு பணிகள், நிவாரண பொருள் வழங்கும் பணியை அரசு, சமூக அமைப்புகள், தனி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் இம்ப்ரஸ் லயன்ஸ் சங்கத்தினருடன் இணைந்து ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேகரித்தனர். 60 சிப்பம் அரிசி, உணவு பொட்டலம்,தண்ணீர், மருந்து,நாப்கின்,பற்பசை, பிரஷ், போர்வை, வேட்டி துண்டு, சட்டை,சேலை, கைலி, பிஸ்கட் ஆகிய நிவாரணப் பொருட்களை வாகனத்தில் சென்று வேதாரண்யம் ஆண்டனி பள்ளி, அம்பேத்கர் நகர், துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு, பூந்தோட்டம், 1 வது வார்டு குடியிருப்பு, ஏரிக்கரை கோயில் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கினர். கொப்பம்பட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கருணாகரன், ரவி,கார்த்தி, மணி, ராமராஜன்,சசிகுமார், சேகர் ஆகியோருக்கு வேதாரண்யத்தில் உள்ள லயன்ஸ் முன்னாள் ஆளுநர் வேதநாயகம், முன்னாள் மண்டல தலைவர்கள் தென்னரசு, அம்பாள் குணசேகரன் ஆகியோர் நிவாரண பொருள் வழங்க உதவி செய்தனர்.நிவாரணப் பொருட்களை வழங்கி வந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வேதாரண்யத்தில் உள்ள உப்பளம் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இது சீரமைப்பு செய்ய ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம். அங்கு வீடு, மரங்கள், படகு என அனைத்தும் சேதமடைந்து உள்ளது.தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதை அனைவரும் படிப்பினையாக கொண்டு இயற்கையை புரிந்து செயல்பட்டால் சீற்றத்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். இதற்கு தேவையான விழிப்புணர்வை அரசு, சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பது உணர வேண்டும்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>