தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பஞ்சகவ்யா தயாரித்து செயல் விளக்கம்

......................................................

Posted on :23 November ,2018 12:14:56
News Image

தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பஞ்சகவ்யா தயாரித்து செயல் விளக்கம் 

திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு ஊரக தோட்டக்கலை நேரடி செயல்விளக்க பயிற்சி வகுப்பு நடைபெறும். தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் இப்பயிற்சி வகுப்பு துறையூர் அருகே பகளவாடியில் நடத்தினர். இந்த வகுப்பில் மாணவிகள் ஸ்ரீவித்யா,சுஜிபிரிதா, தமிழி, வைஷ்ணவி, விஜயலட்சுமி,வினிதா ஆகியோர் கிராமத்தில் உள்ள தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா, தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது, பயன்படுத்துவது, இதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கம் தந்தனர். அதில் மாடு சாணம், மாடு சிறுநீர், தயிர்,நெய், பால்,வெள்ளம்,வாழை, இளநீர், தண்ணீர் ஆகிய 9 பொருள் சேர்த்து 15 நாளில் பஞ்சகவ்யா தயாரிப்பது எளிதானது. இது செடிகள் வளர்ச்சிக்கு உதவுவதோடு, செடிகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். இதனால் தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ, பழச் செடிகள் நல்ல விளைச்சலை தரும். இதேபோல தேங்காய் பால்,தயிர் சம அளவில் கலந்து 7 நாள் காற்று போகாமல் கட்டி வைப்பது மூலம் தேமோர் கரைசல் தயாரித்து பயன்படுத்தினால் செடியிலிருந்து பெறும் விளைச்சல் தரமானதாகவும் நல்ல விலைக்கு விற்க உதவும் என விளக்கம் தந்தனர். கிராமத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்த பெண் விவசாயிகள் செயல் விளக்கம் செய்து பயனடைந்தனர்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>