விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்தி தர திமுக திருச்சி எம்பி தொகுதி செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம்

......................................................

Posted on :21 November ,2018 00:46:03
News Image
விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்தி தர திமுக திருச்சி எம்பி தொகுதி செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் 

கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி தரவேண்டும் என திருச்சியில் நடந்த திமுக எம்பி தொகுதி செயல்வீரர்கள்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாவட்ட திமுக சார்பில் எம்பி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்டச் செயலருமான நேரு தலைமை வகித்தார். இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னாள் எம்பி விஜயன், சச்சிதானந்தம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பெரியண்ணன் அரசு, செல்லபாண்டியன், சந்திரசேகர், எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்டச் செயலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
தமிழகத்தில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கிடுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகையால், கட்சியினர், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல மன்றங்கள் உள்ளிட்ட அனைவரும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள், குடிநீர் பாட்டில்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். கஜா புயலால் நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட ஏராளமான விளைநிலங்களும், வீடுகளும் முற்றிலும் சேதமடைந்து, விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அரசு  அறிவித்துள்ள நிவாரணத் தொகையை, திமுக தலைவரின் வேண்டுகோள்படி உயர்த்தி வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>