அதிமுக போர்க்கள குதிரை ரத்தினவேல் எம்பி பெருமிதம்

......................................................

Posted on :20 November ,2018 17:24:23
News Image

அதிமுக போர்க்கள குதிரை ரத்தினவேல் எம்பி பெருமிதம் 

கட்சியின்  47 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் அதிமுக போர்க்கள குதிரை என ராஜ்யசபா எம்பியும், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளருமான ரத்தினவேல் எம்பி பேசினார்.

துறையூர் ஒன்றிய அதிமுக சார்பில் ரெங்கநாதபுரத்தில் கட்சியின் 47 வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேனை  செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜெயராமன் வரவேற்றார்.

கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, புறநகர் மாவட்ட இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இந்திராகாந்தி,  பேச்சாளர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்பி பேசியதாவது:  அதிமுக இயக்கம் 47 ஆண்டுகாலமாக தொடர்ந்து   எம்ஜிஆர் 10 ஆண்டு ஆட்சியிலும், ஜெயலலிதாவின் 15 ஆண்டுகால ஆட்சியிலும் நிறைய சாதனைகள் செய்துள்ளது.   ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் வெற்றிடமாக போய்விடும், கட்சியையும் ஆட்சியையும் தொடர்ந்து நடத்த முடியாது. இந்த இயக்கத்திற்கு எதிர்காலமில்லை என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் இன்று  எடப்பாடியார் திறமையாக ஜெயலலிதாவின் வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஜெயலலிதா மக்களின் நலன்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விலையில்லா அரிசி, தாலிக்குதங்க   என இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக கொண்டுவந்தது.    தீபாவளிக்கு வெளியான  படத்தில் அதனைக் கொச்சை படுத்தக்கூடிய வகையிலே   விலையில்லாத பொருட்களை நெருப்பிலே போட்டு எரிப்பதை போல புதிதாக வந்துள்ள நடிகர் ஏதோ ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு தானும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அந்த காட்சியை தன் படத்திலே வைத்தார். இதைப் பார்த்த பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு உடனடியாக அந்த காட்சிகளை நீக்கினார்கள். ஜெயலலிதா இல்லாததால் நாம் முதலமைச்சர் ஆகிவிட முடியும் என்று ஒருபக்கம் கமலஹாசன், ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலினின் அத்தனை  சூழ்ச்சிகளையும் அதிமுக முறியடிக்கும். ஸ்டாலின் அதிமுகவை எதிர்ப்பதை போன்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி, மறைமுகமாக தினகரனுடன் சேர்ந்து அரசியல் களத்திலே அதிமுகவை எப்படியாவது வீழ்த்திவிட முடியாதா என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அதிமுக உடைந்து போன கட்சியல்ல உருக்குலைந்து போவதற்கு. அதிமுக ஒரு போர்க்களக் குதிரை அது எந்த போர்க்களத்திலும் திமுகவை சந்திக்கும். அது நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, 20 சட்ட மன்ற இடைத் தேர்தலானாலும் சரி அனைத்திலும் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில்  முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட துணைச்செயலாளர்   வேம்பு , முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் விஜயராகவன், ஸ்ரீதர், ஒன்றிய இணை செயலாளர் மகேஸ்வரி சுப்ரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊராட்சி  செயலாளர் முபாரக் அலி நன்றி கூறினார்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>