......................................................
இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வு தான்
www.livetrichy.com
இனி தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தான் நிரப்பப்படும். இதற்கான சட்டத்திருத்தம் செய்ய மசோதா சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணிகளில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை உள்ள பல்வேறு வகையான பதவிகளுக்கான பணிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்து கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள், மாநில கழகங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், அதிகார அமைப்பில் உள்ள பணிகள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்ததால் நிர்வாக அமைப்பில் தொய்வு ஏற்படுகிறது. அதனால் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மேற்கண்ட பணிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்ப சட்டத்திருத்தம் செய்ய நிதி மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்தார். அந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
www.livetrichy.com
Latest News
இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..
50 ஆண்டு நகராட்சிக்கு..
சத்திரம் பேருந்து நிலையக்..
நதியைக் காக்க ஆர்வமுள்ள..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy