கொரோனா பாதித்து இறந்த 899 பேர் குடும்பத்துக்கு அரசு ரூ. 50 ஆயிரம் நிதி

......................................................

Posted on :03 January ,2022 13:36:49
News Image

கொரோனா பாதித்து இறந்த 899 பேர் குடும்பத்துக்கு அரசு ரூ. 50 ஆயிரம் நிதி

www.livetrichy.com

கொரோனா பாதித்து இறந்த 899 பேர் குடும்பத்துக்கு அரசு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதித்து இறந்த குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 50 நிவாரண நிதி உதவி வழங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்து இறந்தவரின் குடும்ப வாரிசுகள் நிவாரண நிதி உதவி வேண்டி 1620 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 899 பேருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 57 விண்ணப்பம் வெளி மாவட்டத்தை சார்ந்தவையாக இருந்தது அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 202 விண்ணப்பம் வாரிசு மற்றும் சட்டரீதியான பிரச்சினை காரணமாக வழங்க இயலாத நிலை உள்ளது. எஞ்சியவை உரிய ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது. நிலுவை விண்ணப்பம் குறித்த விபரம் https://trichirappalli.nic.in என்ற மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர் கொரோனா ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு எண் குறித்த ஆவணங்களை கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு அல்லது தங்கள் தாலுகா அலுவலகத்தில் தாக்கல் செய்து நிதி உதவியை உடனடியாக பெறலாம். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

www.livetrichy.com

Latest News

இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..

50 ஆண்டு நகராட்சிக்கு..

சத்திரம் பேருந்து நிலையக்..

நதியைக் காக்க ஆர்வமுள்ள..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>