கண் தானம் செய்த துறையூர் சகுந்தலா குடும்பம்

......................................................

Posted on :19 November ,2021 22:56:19
News Image

கண் தானம் செய்த துறையூர் சகுந்தலா குடும்பம்

www.livetrichy.com-Admin

துறையூர் தெற்கு ரத வீதியில் வசித்து வந்தார் சகுந்தலா அம்மாள் (75). இவர் கணவர் சோமசுந்தரம் ரெட்டியார் காலமான பிறகு மகன்கள் துறையூர் வியாபாரிகள் சங்க செயலாளர் காமராஜ், சிதம்பரம் பல்கலைக்கழக அலுவலர் நக்கீரன், மதுராபுரி உமாபதி ஆகியோரின் பராமரிப்பில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலத்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நவம்பர் 19  மதியம் இயற்கை எய்தினார். அவரது இறுதி சடங்கு நவம்பர் 20 நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். சகுந்தலா அம்மாள் கண்களை தானம் செய்ய விரும்பிய குடும்பத்தினருக்கு உப்பிலியபுரம் லயன்ஸ் சங்கம் கண்களை தானமாக எடுத்துச் செல்ல முன்வந்தது. உப்பிலியபுரம் இருதய ராஜ், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சர்தார், சேதுராஜன், ஷாகுல் ஹமீது ஆகியோர் சகுந்தலா அம்மாள் கண்களை தானமாக எடுத்துச் சென்றனர். உப்பிலியபுரம் லயன்ஸ் சங்கம் சகுந்தலா அம்மாள் கண்கள் உள்பட 3 ஜோடி கண்கள் தானமாக பெற்றுள்ளது. கண்கள் தானமாக வழங்கிய சகுந்தலா அம்மாள் குடும்பத்தினருக்கு லயன்ஸ் சங்கம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது. கண்கள் தானமாக வழங்கிய சகுந்தலா அம்மாள் ஆன்மா இறைவன் ஆசி பெற்று இளைப்பாறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கண்கள் தானமாக வழங்கிய சகுந்தலா அம்மாள் மறைவுக்கு www.livetrichy.com  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

Latest News

இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..

50 ஆண்டு நகராட்சிக்கு..

சத்திரம் பேருந்து நிலையக்..

நதியைக் காக்க ஆர்வமுள்ள..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>