ரூ 25 ஆயிரத்துக்கான கவிமணி விருது பெற இளம் படைப்பாளிகளுக்கு பொது நூலகத் துறை அழைப்பு

......................................................

Posted on :19 November ,2021 13:01:54
News Image

ரூ 25 ஆயிரத்துக்கான  கவிமணி விருது பெற இளம் படைப்பாளிகளுக்கு பொது நூலகத் துறை அழைப்பு

www.livetrichy.com - Admin. 

தமிழ் கட்டுரை, சிறுகதைக்கான கவிமணி விருது பள்ளிக்கல்வித்துறையால் புதிதாக வழங்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  அறிவித்தார். அதில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க,  ஒவ்வொரு ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வாயிலாக 3 பேர் தேர்வு செய்து ரூ. 25 ஆயிரம் ரொக்கம், கேடயம், சான்றிதழுடன் கூடிய கவிமணி விருது வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். 

இதற்காக பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளர்களிடம் இருந்து தமிழில் கட்டுரை, சிறுகதை எழுதி அனுப்பி வைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கவிமணி விருதுக்கான போட்டிக்கு தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள்  www.tamilnadupubliclibraries.com என்ற இணைய தள முகவரியில் இருந்து சுய விபர படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 31.12.2021 க்குள் தங்கள் படைப்புகளுடன் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dpltnservices@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமாரை 99414 33630 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு பொது நூலக இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

www.livetrichy.com - Admin. 


Latest News

இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..

50 ஆண்டு நகராட்சிக்கு..

சத்திரம் பேருந்து நிலையக்..

நதியைக் காக்க ஆர்வமுள்ள..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>