கண்கள் தானம் அளித்து உறுதி மொழி எடுத்த தமிழக முதல்வருக்கு பாராட்டு

......................................................

Posted on :07 September ,2020 12:14:39
News Image

 கண்கள் தானம் அளித்து உறுதி மொழி எடுத்த தமிழக முதல்வருக்கு பாராட்டு 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது கண்கள் தானம் அளித்து, கண்தான இருவார விழிப்புணர்வு வாரத்தில் உறுதி மொழி எடுத்து கொண்டதற்காக கண்தான திட்ட இயக்குனர் சந்திரகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு வார விழா ஆகஸ்ட் 25 _ செப்டம்பர் 8 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 8 தேசிய கண்தான தினமாக கெளரவிக்கப்படுகிறது.

மனித உடலில் உயிர் பிரிந்து இறப்பு உறுதி செய்த பிறகும் கண்கள் 6 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும் மருத்துவ உண்மை பலருக்கும் தெரிந்து இருக்கும். 

பிறவி குறைபாடு, நோய் தாக்குதல், விபத்து போன்ற காரணங்களால் கண்பார்வை குறைபாடு நோய், வயோதிகத்தில் பார்வைத்திறன் குறைபாடு நோய் தாக்குதல் ஏற்பட்டு இந்தியாவில் அதிகம் பேர் உள்ளனர். 

கண்பார்வை குறைபாடு நோய்க்கு மாற்று கண் பொருத்துவது தான் தீர்வு. இதனால் மத்திய, மாநில அரசு மருத்துவத்துறை கண்தானம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவில் கண்தான திட்ட அலுவலகம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி கண்தானம் செய்ய விண்ணப்பம் பெற்று உறுதி மொழி பெறப்படுகிறது. கண்தானம் வழங்க உறுதிமொழி எடுத்து விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும் அனைவருக்கும் தேசிய கண்தான தினத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவில், தன் இரண்டு கண்களும் தானம் தர விண்ணப்பம் தந்து உறுதி மொழி எடுத்துள்ளார். இதன் மூலம் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள், மாணவ மாணவிகள், விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கண்தானம் வழங்குவது குறித்து முதல்வர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். தமிழக அரசு குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை கண்தான திட்ட இயக்குனர் சந்திரகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். 

தேசிய கண்தான தினமான செப்டம்பர் 8 ம் தேதி தங்கள் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ அலுவலரிடம் விண்ணப்பம் வாங்கி கண்தானம் வழங்க உறுதி மொழி எடுத்து கொள்ளும் உங்களை மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், www.livetrichy.com, LiveTrichy YouTube Channel சார்பில் பாராட்டி மகிழ்கிறோம். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>