......................................................
திருச்சி ஐடி பார்க் வேலைவாய்ப்பு பெற தயாராகுங்கள் இளைஞர்களே!
www.livetrichy.com
திருச்சி ஐடி பார்க் விரிவாக்க பணிகள் தொடங்குவதால் வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் தயாராக வேண்டும் என மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊரில் கல்வி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பதால் அரசு திட்டங்கள் ஏற்படுத்தப்படுகிறது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் பெருமளவில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மையங்கொண்டு உள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், இன்ஜினியரிங் படித்த மாணவ மாணவிகள் பலர் இங்கு பணியில் உள்ளனர். இங்கு செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தகுதியை மேம்படுத்தி அவர்களுக்கு தங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு வழங்குகின்றன. இதனால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறினாலும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது.www.livetrichy.com
இதை தடுக்க தமிழக அரசு தகவல் தொழில் நுட்ப பூங்காவை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் ஏற்படுத்தியது. தொடக்கத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இங்கு வர தயங்கின. திருச்சி நவல்பட்டு பகுதியில் 60 ஆயிரம் சதுரஅடியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காவில் செய்த மேம்பாட்டு பணிகள், திருச்சியில் உள்ள மனிதவளம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஐடி நிறுவனங்களை ஈர்த்தன. தற்போது ஏழு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்னும் பல நிறுவனங்கள் திருச்சி ஐடி பார்க்கில் தங்கள் கிளை செயல்பட இடம் கேட்டு விண்ணப்பம் செய்தன.
விண்ணப்பம் செய்த நிறுவனங்களுக்கு போதிய இடம் அளிக்க திருச்சி ஐடி பார்க் விரிவாக்கம் செய்ய 2018 ல் அரசு முடிவு செய்தது. திருச்சி ஐடி இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி ஐடி பார்க் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் ரூ. 42.26 கோடி மதிப்பில், 1.13 லட்சம் சதுர அடியில், ஐந்து தளத்துடன் அமைக்க பொதுப்பணித்துறை ஒப்பந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டில் நிறைவடையும் வகையில் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் விரிவாக்கப்பட்ட திருச்சி ஐடி பார்க்கில் புதிய நிறுவனங்கள் வாயிலாக நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு திருச்சி பகுதி இளைஞர்களுக்கு கிடைக்கும்.www.livetrichy.com
தற்போது கல்லூரியில் முதலாண்டு படிக்க உள்ள மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தகுதி, பயிற்சியை பெற தயாராக வேண்டும் என மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.www.livetrichy.com
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy