......................................................
திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் கோவிட்19 ஆப் உருவாக்க ஆன்லைன் ஹெக்கத்தான் போட்டி அறிவிப்பு
www.livetrichy.com
கொரோனா சிகிச்சைக்காக 'ஆப்' உருவாக்க ஆன்லைனில் ஹெக்கத்தான் போட்டியை ஏப்ரல் 27 முதல் மே 6 வரை நடத்த திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்காக உதவும் வகையில் 'ஆப்' உருவாக்க ஆன்லைனில் ஹெக்கத்தான் போட்டியை ஏப்ரல் 27 முதல் மே 6 வரை நடத்த திருச்சி அண்ணா பல்கலைக்கழக டீன் செந்தில்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில் உள்ளதாவது : கொரோனா வைரஸ் பரவுவது, பாதிப்புக்கு எதிராக தொழில் நுட்பத்தை கண்டறிந்து தடுக்கும் வகையில் ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும் என சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி அகில இந்திய தொழில்நுட்ப கழக அங்கீகாரத்துடன் தமிழக அளவில் ஏப்ரல் 27 முதல் மே 6 வரை ஆன்லைனில் கொரோனாவுக்கு அதிவிரைவு செயலி(ஆப்)உருவாக்க ஹெக்கத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்த ஆப் உருவாக்குவதன் மூலம் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிதல், அவர்களது தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து பணிகளை பிரித்து அளித்தல், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள் முதல் நோயாளிகள் அறிகுறிகள் நிலை குறித்து தகவல்கள், மருத்துவர் நியமனம், ஒருங்கிணைந்த பேரிடர் கால கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறை செய்தல், நிவாரண நிதி, நிவாரண பொருட்களை திரட்டுதல், கோவிட்19 பரிசோதனை செய்து முடிவை ஆன்லைனில் பெறுதல், தனிமைப்படுத்தப்படும் நபருக்கு உணவு அளித்தல், அரசு பணிகளை ஒருங்கிணைத்தல், அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி கோரும் தனி நபர் விண்ணப்பம் பரிசீலித்தல், சிறு குறு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விநியோகம், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனித்து வாழும் பெண்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும். சிறந்த ஆப் மற்றும் இணைய தளத்தை உருவாக்குபவர்களுக்கு தேசிய, மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படும். அவர்களது வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை பெற உதவும். இப்போட்டியில் பங்கேற்பது எப்படி? என்பது உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் பெற http://www.covid19hackathon.in/ என்ற இணைய தளத்தில் பார்த்து கொள்ளவும். இவ்வாறு அறிவிப்பில் உள்ளது. www.livetrichy.com
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy