எஸ்எஸ்எல்சி மாணவர்களே பொதிகை சேனல் பாருங்க.

......................................................

Posted on :15 April ,2020 09:41:24
News Image

எஸ்எஸ்எல்சி மாணவர்களே பொதிகை சேனல் பாருங்க. 

www.livetrichy.com 

எஸ்எஸ்எல்சி மாணவர்கள் ஊரடங்குக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்வு எழுத தயாராகும் விதமாக டிடி பொதிகை சேனலில் ஏப்ரல் 15 ல் இருந்து காலை 10 _ 11 மணி வரை பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக மாா்ச் 27 ம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோவு, ஏப்ரல் 14 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தேர்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தேர்வுக்கு தங்களை தயாா் செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயாா் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் மாணவா்களை, பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் ஏப்ரல் 15 முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும்.

ஊரடங்கு காலத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தினமும் தங்கள் பாடங்களை நேரம் ஒதுக்கி படிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளவும்.    www.livetrichy.com 


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>