புத்தனாம்பட்டி என்எம்சி கல்லூரி இயற்பியல் துறை ஆண்டு விழா

......................................................

Posted on :14 March ,2020 00:36:00
News Image

புத்தனாம்பட்டி என்எம்சி கல்லூரி இயற்பியல் துறை ஆண்டு விழா 

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி(என்எம்சி) இயற்பியல் துறை ஆண்டு விழா  நடைபெற்றது. முதுகலை இரண்டாமாண்டு மாணவி நித்யா வரவேற்றார். உதவி பேராசிரியர் குமரவேல் துறையின் ஆண்டறிக்கை வாசித்தார். அதில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடியது,  மாணவர்கள் ராக்கெட் மாதிரி செய்து கோபி கல்லூரியில் நடைபெற்ற இஸ்ரோவின் தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கு பெற்றது, இயற்பியல்  உதவிப்பேராசிரியர் ரமேஷ் உடன்  5 மாணவர்கள் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தது, ஆந்திர மாநிலம் விஜய நகரம் அருகே  நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் அறிவியல் ஆராய்ச்சி சமர்ப்பித்தது, மேலும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி அனைத்திலும் இயற்பியல் துறை மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கியதை  சுட்டிக்காட்டினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் பொன் பெரியசாமி தலைமை வகித்தார். அவர் மாணவர்கள் அடிப்படை அறிவியல் பயில வேண்டும், நெட் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும், நிறைய தொழில் பயிற்சி செல்ல வேண்டும் என்று பேசினார். மேலும் இயற்பியல் ஆராய்ச்சித் துறை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அரசு நிதியுதவி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.

கல்லூரித் தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அதில் இயற்பியல் துறை கல்லூரியிலேயே சிறந்து விளங்குவதாகவும், ஆராய்ச்சியில் அறிவியல் துறை மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். கல்லூரியில் முதுகலை படிக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே கணினி ஆய்வக வேலை செய்து படிக்க வசதி உள்ளதாக கூறினார். மேலும் சாதனை புரிந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் சுயநிதி பிரிவு இயற்பியல் துறை தலைவர் கபிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்பியல் துறை உதவி பேராசிரியை  பாக்கியலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட இயற்பியல்துறை மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.

தகவல் : ரமேஷ், உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

விழாவில் மாணவி சக்திபிரியா சிலம்பம், மாணவி சரோஜா கரகாட்டம் வீடியோவை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி காணலாம்.   https://youtu.be/6um_IeUmbIU கரகம்   https://youtu.be/hF49acNySao சிலம்பம்

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>