இ.கன்டென்ட் பாடங்கள் தயாரிக்க 2 நாள் பயிற்சி

......................................................

Posted on :12 March ,2020 18:29:29
News Image

இ.கன்டென்ட் பாடங்கள் தயாரிக்க 2 நாள் பயிற்சி 

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பாடங்கள் இ.கன்டென்ட் வடிவில் தயாரிப்பதற்கான 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் கலை, அறிவியல், மேலாண்மை துறைகளைச் சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வியியல் தொழில் நுட்பத்துறை பேராசிரியர்கள் முனைவர் எம். பார்த்தசாரதி,  முனைவர் டி. எனோக் ஜோயல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பில், பேராசிரியர் எம். பார்த்தசாரதி,  இ. கன்டென்ட் மின் கற்றலின் ஒரு பகுதியாகும். தலைப்பு வாரியாக கற்றல் தொகுப்பு, பேச்சு வடிவம், படத்தொகுப்பு ஆகியவற்றை வைத்து எவ்வாறு திரைக்கதை வடிவமைப்பது என்று செயல்முறையுடன் விளக்கினார். காணொளிக்காட்சி பதிவுப்பற்றி முனைவர் டி. எனோக் ஜோயல் எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து பேராசிரியர்களும் அவர்தம் துறையை சார்ந்த சிறு கற்றல் இ.கன்டென்ட் பதிவை தயார் செய்தனர். 

பயிற்சி நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி தலைமை வகித்தார். கல்லூரிக்குழுத் தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர், பொன் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு.முரளிதரன் மற்றும் கே.டி.தமிழ்மணி ஆகியோர் பயிற்சிப்பட்டறையை வழிநடத்தினர். வீடியோ பதிவு மற்றும் வடிவமைப்பு பணியினை உதவிப்பேராசிரியர் ரமேஷ், ஜெகதீசன் மற்றும்  விவேகானந்தன் செய்தனர். விழா முடிவில் சுமார் 30 இ.கன்டென்ட் பதிவுகள் தயார் செய்யப்பட்டது.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>