திருச்சி எஸ்.ஆர்.எம். கல்லூரி தமிழ்த்துறை தேசிய கருத்தரங்குக்கு ஆய்வு கட்டுரை அனுப்ப அறிவிப்பு

......................................................

Posted on :05 March ,2020 14:23:22
News Image

திருச்சி எஸ்.ஆர்.எம். கல்லூரி தமிழ்த்துறை தேசிய கருத்தரங்குக்கு ஆய்வு கட்டுரை அனுப்ப அறிவிப்பு 

எஸ்.ஆர்.எம். கல்விகுழுமம் நடத்தும் எஸ் ஆர்.எம். திருச்சி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தேசியக் கருத்தரங்கம் 'தமிழ் இலக்கியங்களில் பன்முக நோக்கு' என்ற தலைப்பில் மார்ச் 24 ம் தேதி நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் அனைத்துத் துறைச்சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறன. கட்டுரைகள் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்து ஐஎஸ்எஸ்என் எண்ணுடன் நூலாக வெளியிடப்படும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்கணக்கு நூல்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை, புதினம், சிறுகதை, நாடகங்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், நாட்டார் இலக்கியங்கள்,  தலித் இலக்கியங்கள், கல்வெட்டியல், தமிழ் இதழ்களின் பணிகள், அறிவியல் தமிழ் என ஆய்வுக்கள கட்டுரைகள்  இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் இருப்பது சிறந்தது. சான்றாக, திருக்குறளில் மேலாண்மையியல், தமிழ் இலக்கியங்களில் நீர்வளப் பாதுகாப்பு முதலான தலைப்புகளில் கட்டுரைகளை எதிர்பார்க்கப்படுகின்றன. கட்டுரைகள் கணினி பாமினி எழுத்துருவில் ஏ4 தாளில் 5 பக்க அளவில் இருக்க வேண்டும். கட்டுரையில் தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி குறிப்பிட்டு srmtamilconferencetry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு word file ஆக அனுப்ப வேண்டும். பேராசிரியர்கள் ரூ. 500, ஆய்வாளர்கள் ரூ. 400 கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டுரை, பதிவுப்படிவம், வரைவோலை ஆகியவற்றை மார்ச் 9 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்கள் அறியவும், படிவம் அனுப்பவும் தொடர்பு முகவரி: முனைவர் ஜெ. ரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர்,            எஸ்ஆர்எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரி,  சமயபுரம் அருகில்,    திருச்சி _ சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி _ 621105. அலைபேசி எண் : 9791755243, 9843725183.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>