ஆதிதிராவிட மாணவர்கள் தாட்கோ கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு

......................................................

Posted on :04 March ,2020 08:33:26
News Image

ஆதிதிராவிட மாணவர்கள் தாட்கோ கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு 

திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மற்றும் தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் வாயிலாக ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு முழு நேர தொழில்முறை, தொழில்நுட்ப படிப்புக்கு, இந்தியாவில் படிக்க ரூ. 10 லட்சம், வெளிநாட்டில் படிக்க ரூ 20 லட்சம் வரையும் கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கல்விக்கடன் விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு, நன்னடத்தை சான்று, கல்வி கட்டணம், கல்வித்தகுதி சான்று, ஆதார் அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, கல்லூரி ஐடி, கல்லூரியில் பணம் செலுத்திய ரசீது, மார்க் ஷீட், (வெளிநாடு)பாஸ்போர்ட், விசா ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பதாரர் ஆதிதிராவிடராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கடன் தொகையில் 12.5 சதவீத வைப்புத்தொகை தேசிய வங்கியில் மனுதாரர் பெயரில் செலுத்தி அதை தாட்கோவுக்கு உரிமை செய்து தர வேண்டும். கடன் தொகைக்கு எல்ஐசி போன்ற காப்பீடு நிறுவனத்தில் மனுதாரர் காப்பீடு செய்து அந்த பத்திரத்தில் தாட்கோ நிர்வாக இயக்குனர் நாமினியாக சேர்க்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே கல்விக்கடன் பெற முடியும். அரசு பணியில் உள்ள ஒருவர் கடன்தொகைக்கு ஜாமீன் தர வேண்டும். 

கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெற மாவட்ட மேலாளர், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, திருச்சி என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் வேலைநாளில் சென்று பெற்று விபரங்கள் தெரிந்து விண்ணப்பிக்கலாம். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>