பாரம்பரிய கலாச்சார திருவிழா திறமை தேர்வு 2020 போட்டியில் புத்தனாம்பட்டி என்எம்சி கல்லூரி மாணவர்கள் அசத்தல்.

......................................................

Posted on :02 March ,2020 21:49:23
News Image

பாரம்பரிய கலாச்சார திருவிழா  திறமை தேர்வு 2020 போட்டியில் புத்தனாம்பட்டி என்எம்சி கல்லூரி மாணவர்கள் அசத்தல். 

நாமக்கல் மாவட்டம் நேரு யுவகேந்திரா, மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான பாரம்பரிய கலாச்சார திருவிழா  திறமை தேர்வு 2020 போட்டியை ஸ்பெக்ரம் அகாடமி பள்ளியில் நடத்தின. 900க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் சிலம்பம், யோகா, பரதம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற கலாச்சார போட்டிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட கலெக்டர் மகாராஜ் தலைமை வகித்து, போட்டியிலும், வாழ்க்கையிலும் மாணவர்கள் வெற்றி பெற  நாளொன்றுக்கு பதிமூன்று மணிநேரம் உழைக்க வேண்டும். அனைவரும் மருத்துவர் மற்றும் பொறியாளர் ஆனால் வேலைவாய்ப்பு கிடைக்காது. விளையாட்டில் சிறந்து விளங்கி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரி போன்று வர வேண்டும். வாழ்க்கையில் சரியான இலக்கு இருக்க வேண்டும். நமது இலக்கை சென்று அடையும் வரை நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், ஸ்பெக்ரம் பள்ளி தாளாளர் விக்னேஷ்  வாழ்த்தி பேசினர்.

இந்த போட்டியில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியை சார்ந்த ஆறு மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். சிலம்பம் போட்டியில் மூன்றாமாண்டு இயற்பியல் மாணவி சக்திப்ரியா, முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவன் பூபாலன் முதல் பரிசும், இரண்டாமாண்டு இயற்பியல் மாணவி ரேணுகாதேவி இரண்டாம்  பரிசும், இரண்டாமாண்டு கணினி பயண்பாட்டு அறிவியல் மாணவன்  குபேரன் இரண்டாம்  பரிசும், மூன்றாமாண்டு கணிதவியல்  மாணவன்  பழனிவாசன்  மூன்றாம்  பரிசும் பெற்றனர். யோகா  போட்டியில்மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி  தனப்பிரியா  முதல் பரிசு பெற்றார்.

முன்னாதாக கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி, நிர்வாகக் குழுத்தலைவர் பொன்பாலசுப்பிரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன் மற்றும்  ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர்  மாணவர்களை ஊக்குவித்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் மனோகரன் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

சிலம்பம் போட்டி முதல் பரிசு வென்ற மாணவர் பூபாலன் வீடியோவை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி காணலாம்.   https://youtu.be/MttqLyri15Q


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>