சிறுதானியங்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து ஜனவரி 27 பயிற்சி

......................................................

Posted on :25 January ,2020 10:43:54
News Image

சிறுதானியங்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து ஜனவரி 27 பயிற்சி 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையம் சிறுகமணியில் 27.01.2020  திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சிறுதானியங்களை  பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயன் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒரு நாள் பயிற்சியில் சிறுதானியங்களை பதப்படுத்துதல், மருத்துவ பயன்கள், சிறுதானியங்களிலிருந்து தயார் நிலை உணவுகள் தயாரிக்கும் முறைகள், உணவு தயாரித்தலுக்கான உரிமம் பெறுதல், தொழிலுக்கான வங்கி கடன் பெறுதல் மற்றும் சந்தை படுத்துதல் குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகள் வேளாண் அறிவியல் நிலைய துறை வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள் வழி எடுத்துரைக்கப்படும். மேலும் தயார் நிலை உணவுகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய செயல் விளக்கம் நடைபெறும்.  

எனவே விவசாயிகள், தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், கிராம மற்றும் நகர்ப்புற பெண்கள் இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.நுர்ஜஹான் ஹனீப்  அழைப்பு விடுத்துள்ளார். 

இப்பயிற்சிப் பற்றிய தகவல் அறிய 0431-2614417,  9944198709 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். 



Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>