......................................................
தொட்டியம் நூலகத்தில் ஜனவரி 20 ல் விவசாயப் பயிர் இலவச மருத்துவ முகாம்
தொட்டியம் கிளை நூலகத்தில் ஜனவரி 20 ம் தேதி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை விவசாயப் பயிர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமை டாக்டர் சுவாமிநாதன் அறக்கட்டளை ஆராய்ச்சி மையம், தொட்டியம் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. முகாமில் அறக்கட்டளை ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் கிரிஜா, பயிர் மருத்துவர்கள் சுதாகர், தனுஷம்மாள் ஆகியோர் பயிர் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகின்றனர். நூலக வாசகர் வட்டத்தலைவர், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர், ஆசிரியர் வரதராஜன், நூலகர் செல்வமணி முன்னிலை வகிக்கின்றனர். விவசாயிகள் முகாமிற்கு வரும் போது தங்கள் வயலில் சாகுபடி செய்துள்ள நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, தென்னை, மா, காய்கறி, பழம், கீரை உள்ளிட்ட பயிர்களின் பாதிக்கப்பட்ட மாதிரி பயிர் மற்றும் தங்கள் மொபைல் போனை எடுத்து வர வேண்டும். முகாமில் பயிர் மருத்துவர்கள் பரிசோதித்து மேலாண்மை பரிந்துரைகளை மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைப்பார்கள். அதை தங்கள் பகுதியில் உள்ள வேளாண் இடுபொருள் கடையில் காண்பித்து தேவையான பயிர் பாதுகாப்பு மருந்து பெற்று பயனடையலாம். மேலும் பயிர் சேதத்தை தவிர்க்கலாம். முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முகாம் குறித்து மேலும் விபரங்கள் அறிய நூலகர், 04326 _ 254306, 97516 88028 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy