திருச்சி நிறுவனத்தில் அப்துல் கலாமுக்கு கோயில் கட்டி வழிபடும் வர்த்தகர்

......................................................

Posted on :15 October ,2019 15:14:21
News Image

திருச்சி  நிறுவனத்தில் அப்துல் கலாமுக்கு கோயில் கட்டி வழிபடும் வர்த்தகர் 

இளைஞர்களின் கனவு நாயகனாக திகழும் அப்துல்கலாமிற்கு திருச்சி, தில்லை நகர், 10 வது குறுக்கு சாலையில் உள்ள சூரிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வரும் புஷ்பராஜ், தனது அலுவலகம் முன்பு 2016 ம் ஆண்டு மார்பளவு சிலையுடன் கோயில் கட்டி, கலாம் 2020, கனவு காணுங்கள், ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே                ( இலட்சிய) கனவு என கல்வெட்டு அமைத்துள்ளார்.

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, முன்னாள் குடியரசுத் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்தவர். 1999 ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றியவர். 2015 ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் ஷில்லாங்கில் உள்ள கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மறைந்தார். உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார்.

ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாளான இன்று அவருக்கு வழிபாடு செய்து கனவு நாயகன் கனவு நிஜமாகும் வரை அனைவரும் உழைப்போம் என உறுதி ஏற்றார்கள் .

நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் , உதயகுமார், வீரமணி, நாகராஜ், ஜெசி, அமர், மாதேஷ், கவிராஜ், பிரகாஷ், சண்முகப்ரியா உட்பட பலர் பங்கேற்றார்கள்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>