அஞ்சல் வாரத்தில் பழங்காலத்தில் ரன்னர் மூலம் கொண்டு செல்லக்கூடிய சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் வெளியீடு

......................................................

Posted on :15 October ,2019 14:33:17
News Image

அஞ்சல் வாரத்தில் பழங்காலத்தில் ரன்னர் மூலம் கொண்டு செல்லக்கூடிய சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் வெளியீடு

தபால் அல்லது அஞ்சல் என்பதைக் குறிக்க  பயன்படுத்தும் போஸ்ட் என்ற சொல் இடம் என்பதைக் குறிக்கும். போஸ்ட் என்பது பொஸிஷியோ என்ற லத்தீன் வார்த்தை வழி வந்ததாகும். தபால்களை சேகரிப்பது, பிரிப்பது, எடுத்துச்செல்வது, உரியவர்களிடம் சேர்ப்பது என்று பலவகை பணிகளில் ஈடுபட்டிருக்கும் இன்றைய நவீன அஞ்சலக சேவையோடு ஒப்பிடும்போது இந்த பெயர் மிகவும் பழமையானதாக தோன்றலாம். உண்மையாக போஸ்ட் என்ற சொல் 15 ம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த புதிய அஞ்சல் சேவைகே முற்றிலும் பொருந்தும். போஸ்ட் என்ற சொல்லை முதன் முதலாக 13 ம் நூற்றாண்டில் பயன்படுத்தியவர் மூன்றாம் போப்ஹனோரியஸ் ஆவார். 18 ம் நூற்றாண்டில் கடிதங்களை போட்டு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட மேல் என்ற தோல் பையை குறிக்கும் ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது மெயில் என்கிற வார்த்தை ஆகும்.

அஞ்சலகத்தில் பொருத்தவரை உடன் முதன்மைப் பணியாக விரைவாக முறையாகவும் பத்திரமாகவும் கடிதங்களை வேறு இடங்களுக்கு அனுப்பி உரிய முகவரியுடன் கொண்டு சேர்ப்பது அஞ்சல் செயல்பாடுகள் மெயில் ஆபரேஷன்ஸ் ஆகும்.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் காலநிலை மாறுபாடுகளும் நல்ல சாலைகளும் போதுமான போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் எளிதான செயல் அல்ல. தொடக்க காலத்தில் போக்குவரத்து வசதி என்பது மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒட்டகம் மற்றும் நீர்வழிப் பாதை வழியாக செல்லும் படகுகள் என அஞ்சல் செயல்பாடுகள் இருந்தது. அஞ்சலக ஊழியர்கள் மற்றும் வண்டிகளை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி கொண்டு செல்கிற போது கொட்டும் மழை போன்ற இயற்கை சீற்றம், கள்வர்கள் தொல்லை இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாயிற்று. இதன் காரணமாக கடிதங்கள் மெதுவாகவே உரியவர்களுக்கு போய் சேர்ந்தன. காலப்போக்கில் கடிதப் போக்குவரத்து வளர்ந்தது. ரன்னர், மாட்டு வண்டி ,குதிரை வண்டி, ஓட்டகம், ரயில்வே அஞ்சலகம், கப்பல், மோட்டார் வாகனம், விமான சேவை மூலமாக அஞ்சல் செயல்பாடுகள் நடைபெற்றன. 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 _ 15 வரை கடைபிடிக்கப்படும் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி திருச்சியில் அஞ்சல் செயல்பாடுகளை குறிக்கும் வண்ணம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு நிகழ்ச்சி நடந்தது. 

இதில் ரன்னர் என்பவர் தபால் பட்டுவாடா செய்ய அரிக்கேன் விளக்கு, சலங்கை ஒலி எழுப்பும் நீண்ட குத்தீட்டி, தலைப்பாகை அணிந்து தபால் பையை எடுத்து செல்லும் பணியை முன்பு சிரமப்பட்டு செய்து வந்துள்ளனர். அதை நினைவூட்டி அப்பணியை செய்து வந்தவர்களை போற்றும் விதமாக சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் இன்று வெளியிடப்பட்டது. 

அக்கால ரன்னர் போல சிறப்பு உடையில் வந்த தபால் ஊழியர் பாஷா மூலம் தலைமை தபால் அலுவலகத்திலிருந்து தெப்பக்குளம் தபால் அலுவலகம் வரை கொண்டு சேர்க்கும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடை பெற்றது. 

நிகழ்ச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் அஞ்சல் உறையை வெளியிட, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா, தபால் தலை மற்றும் கையெழுத்து சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், முதுநிலை கோட்ட அஞ்சல் பிரிப்பு கண்காணிப்பாளர் ரவீந்திரன், இந்திரா கணேசன் கல்விக் குழும இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டார்கள்.

அஞ்சல்தலை சேகரிப்பு மைய அலுவலர்கள் ராஜேஷ், ரகுபதி, அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>