கை கழுவினால் 80 சதவீத நோய் வராது என்று உலக கை கழுவும் விழிப்புணர்வு தினத்தில் தகவல்

......................................................

Posted on :15 October ,2019 11:01:37
News Image

கை கழுவினால் 80 சதவீத நோய் வராது என்று உலக கை கழுவும் விழிப்புணர்வு தினத்தில் தகவல் 

நமது முன்னோர்கள் வெளியே சென்று வீட்டுக்குள் வரும் போது கை கால் கழுவி வரும் பழக்கத்தை கடைபிடித்து நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர். 

தற்போது நவீன கலாச்சார பாதிப்பால் மக்கள் நல்ல பழக்க வழக்கங்களை கூட மறந்து விட்டனர். 

உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு கை கழுவுதல் பற்றி திருச்சி எலைட் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

கை கழுவும் பழக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் 

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி,  2008-ம் ஆண்டிலிருந்து கை கழுவும் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு எலைட் சிறப்புப் பள்ளியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது.பள்ளித் தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

எப்போது எல்லாம் கை கழுவ வேண்டும்? 

கை கழுவுதல் குறித்து இயற்கை நல வாழ்வியல் மற்றும் யோகா பயிற்றுநர் விஜயகுமார், ‘’கையினை முறையாக கழுவாததால் பல நோய் தொற்று  ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், வாகனம் ஓட்டி வந்த பிறகும்  கைகளை முறையாகக் கழுவும் பழக்கத்தை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அதோடு செல்போன், கணினி பயன்படுத்திய பிறகும், வீட்டில்  வளர்க்கும்   செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கை கழுவ வேண்டும்.

எப்படி கை கழுவ வேண்டும்? 

கை கழுவுதல் என்பது வெறும் தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும் என விளக்கினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>