துறையூரில் விவசாயிகள் பயன்பெற ரூ 60 லட்சம் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலைய கிடங்கு பூமி பூஜை

......................................................

Posted on :04 October ,2019 00:08:19
News Image

துறையூரில் விவசாயிகள் பயன்பெற ரூ 60 லட்சம் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலைய கிடங்கு பூமி பூஜை 

துறையூரில் விவசாயிகள் பயன்பெற ரூ 60 லட்சம் மதிப்பிலான விதை சுத்திகரிப்பு நிலைய கிடங்கு அமைக்க பூமி பூஜை நடந்தது.

துறையூர் மண் விண் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த 4 ஆண்டாக விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பயிற்சி, கருத்தரங்கம் நடத்தி வருகிறது. வேளாண் கருவிகள் தொழில்நுட்பத்தில் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் வேளாண் திட்டங்கள் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவும், விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய உதவுகிறது. துறையூர் அருகே பெருமாள்பாளையம் கிராமத்தில் நிறுவனம் சார்பில் ரூ 60 லட்சம் மதிப்பிலான விதை சுத்திகரிப்பு நிலைய கிடங்கு அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் மகேந்திர மணிவாசன், திருச்சி வேளாண் வணிகத்துறை அலுவலர் நாகேஸ்வரி, துறையூர் வேளாண் அலுவலர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தொல்காப்பியன், தலைவர் ரெங்கராசு, இயக்குனர்கள் சீனிவாசன், பாலமுருகன், பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>