மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம்

......................................................

Posted on :25 September ,2019 14:37:37
News Image

மழை காலத்தில் டெங்கு காய்ச்சல்  தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

மழைக்காலங்களில் தேங்கும் நீரில் கொசு உற்பத்தியாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் சுற்றுப்புறங்களில் போடப்படும் டயர், தேங்காய் சிரட்டை ,பாலித்தீன் பைகளில் நீர் தேங்கும் நீரில் கொசு உற்பத்தியாகும். எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும் காய்ச்சல் ஏற்பட்டிருப்பின் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் வலியுறுத்தப்பட்டது.

நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.

நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய பொருட்கள் சம அளவிலான பொடியே நிலவேம்பு பொடியாகும். அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால் டெங்கு காய்ச்சலை தடுக்கவும்,  தவிர்க்கவும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் வழங்கிய நிலவேம்பு பொடியினை கசாயமாக செய்து குழந்தைகளுக்கு மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம்  வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி, உதவி ஆசிரியர் புஷ்பலதா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>