சிறந்த இளைஞர் மன்றத்திற்கு ரூ.5 லட்சம் விருது : விண்ணப்பிக்க என்.ஒய். கே. அறிவிப்பு

......................................................

Posted on :19 September ,2019 10:22:15
News Image

சிறந்த இளைஞர் மன்றத்திற்கு ரூ.5 லட்சம் விருது : விண்ணப்பிக்க என்.ஒய். கே. அறிவிப்பு 

சிறந்த இளைஞர் மன்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா(என்.ஒய்.கே.)ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.         அவரது அறிவிப்பில் உள்ளதாவது : மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் சமூக சேவை செய்து வரும் சிறந்த இளைஞர் மன்றத்திற்கு மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஊக்குவிப்பு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்படும் சிறந்த இளைஞர் மன்றத்தினர் 2019 _ 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர் மாற்றத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம். 

திருச்சி மாவட்டத்தில் குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சமூக , சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு, கிராமத்தில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி தருதல், அரசு திட்டங்களை பெற்று தருதல் ஆகிய பணிகளை செய்து வரும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். 

மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுதோறும் புதுப்பித்து வரும் மன்றத்தினர் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஆண்டில் விருது பெற்றவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. 

விண்ணப்பத்தில் 1.4.2018 முதல் 31.3.2019 வரை தங்கள் பகுதியில் செய்த பணிகள் குறித்து அழைப்பிதழ், போட்டோ, செய்தி, பாராட்டு சான்றிதழ், பயனாளிகள் பட்டியல் இணைக்க வேண்டும். 

விருதுக்கு தேர்வாகும் மன்றத்திற்கு மாவட்ட அளவில் ரூ. 25 ஆயிரம், மாநில அளவில் ரூ. ஒரு லட்சம், தேசிய அளவில் முதலிடம் ரூ. 5 லட்சம், இரண்டாமிடம் ரூ. 3 லட்சம், மூன்றாமிடம் ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 

விண்ணப்பத்தை திருச்சி அரசு சட்டக்கல்லூரி எதிரில் உள்ள நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் நேரில் பெற்று செப்டம்பர் 30 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விபரங்கள் 0431 _ 2421240, 94436 87794 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அவரது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>