*நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி

......................................................

Posted on :13 May ,2019 23:52:57
News Image

*நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் *நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் *நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவில் ஒரு ரூபாய் பணத்தாள்கள் இந்திய அரசு நிதி செயலாளர் கையொப்பமிட்டு வெளியிடப்படுகிறது.   ரூபாய் 10 ,20 , 50, 100, 200 ,500,2000  இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிட்டு வழங்கப்படுகிறது.

இந்திய பணத்தாள்கள் நூறு எண்ணிக்கையிலான பணத்தாள்கள் ஒரு கட்டாக வெளிவருகிறது. பணத்தாள்கள் அச்சிடும் பொழுது ஏற்படும் பிழை காரணமாக அதில் எத்தனை பணத்தாள்கள் பிழையாக உள்ளதோ அவற்றுக்கு மாற்றாக *நட்சத்திர குறியீடு உடன் பணத்தாள்கள் வெளியிடப்படுகிறது. அப்பணத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணின் முன்புறம் *நட்சத்திர குறியீடு இருக்கும்.பணத்தாள்களை முகமது சுபேர் காட்சிப்படுத்தி விளக்கினார்.

2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை *நட்சத்திர குறியீடு அச்சிட்டு வெளிவருகிறது .2006 ஆம் ஆண்டு ஒய் வி ரெட்டி, சுப்பாராவ் , ரகுராம்ராஜன் முதற்கொண்டு தற்போது வரை ஆளுநர்கள் கையொப்பமிட்டு பணத்தாள்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

முன்பு பணத்தாள்களின் வலது புறம் மேலும் இடது புறம் கீழும் ஆறு இலக்க எண்கள் முன்பு *நட்சத்திர குறியீடு இடம் பெற்றிருக்கும். தற்போது இடது புறம் மேலும் வலது புற கீழும் ஏறுவரிசையில் எண்கள் அச்சிட்டு வெளிவருகின்றன.

கண்காட்சியில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகாஆசிரியர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், பாண்டியன்,   ராஜேஷ் , சுவாமிநாதன்,          மன்சூர் ,அரிஸ்டோ உள்ளிட்டோர்  பங்கேற்றார்கள்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>