முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்

......................................................

Posted on :26 March ,2019 19:51:24
News Image

முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார் 

திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ்(74) மாலை 6.30 மணியளவில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் துறைமங்கலத்தில் 1944 ம் ஆண்டு மே 5 ம் தேதி பிறந்தார். பிஇ பட்டதாரியான இவர் திமுக தலைமை மீது பற்றுகொண்டு அக்கட்சியில் இணைத்து கொண்டார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராக 1987 முதல் 1993 வரை பணியாற்றினார். 1980 _ 1984 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மதிமுகவை தொடங்கும் போது வைகோவுடன் சென்று மீண்டும் சில காலம் கழித்து திமுகவில் சேர்ந்தார். திமுக சார்பில் 2006 ல் முசிறி தொகுதியில் வென்று வனத்துறை அமைச்சராக இருந்தார். உட்கட்சி பூசலால் திமுக தலைமை மீது அதிருப்தி அடைந்து கடந்த 2016 ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடந்த ஒரு ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்தார். இன்று மாலை 6.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். திருச்சி தில்லைநகர் வீட்டில் இருந்து மார்ச் 27 முன்னாள் அமைச்சர் செல்வராஜ் இறுதி ஊர்வலம் நடைபெறும். அவரது மறைவுக்கு livetrichy.com தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>