Live Trichy.com மகளிர் தின கட்டுரை போட்டி

......................................................

Posted on :07 March ,2019 14:13:49
News Image


Live Trichy.com மகளிர் தின கட்டுரை போட்டி 
திருச்சி மாவட்ட தகவல் இணையதளம் livetrichy.com சார்பில் பெண் எப்போது சக்தி ஆகிறது?  என்ற தலைப்பில் ஆண் உணர்ந்து மகளிர் தினத்துக்குள்  service.livetrichy@gmail.com என்ற நமது இமெயிலுக்கு கட்டுரை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு செய்து இருந்தோம்.

                                                      புதுச்சேரியை சேர்ந்த    ஸ்டெல்லா மேரி எம் ஜே நமது தலைப்பை வரவேற்று எழுதி உள்ளது. அவை அப்படியே உங்கள் வாசிப்புக்கு... 

பெண் எப்போது சக்தி ஆகிறது?

வணக்கம்!  பெண் எப்போது சக்தி ஆகிறது என்ற தலைப்பே அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது பெண்ணுள் எத்தனை வடுகள் இருந்தாலும் அத்தனையும் தூசியென எண்ணி ஊதிவிட்டு போவாள்!

                                                                ஆழமும் அவள் தான் ஆளுமையும் அவள் தான் பெண் எப்போ சக்தி ஆகிறாள் ..அவள் எப்பவுமே சக்தி தான் ..!

சிறுவயதில் பாலியல் தீண்டலை புரட்சி கொண்டு புறம் தள்ளி விட்டு கொண்டாளே அது சக்தி ...!

எத்தனை வறுமையிலும் தன்மானத்தை இழக்காமல் தன் வேர்வையிலே ஏணியாக வளர்ந்தாலே அதுவும் சக்தி தான் ..!

அல்லும்பகலும் தன் குடும்பத்துக்கு உழைக்கும் சக்தியை யார் தந்தது ..!

குடியில் குடியை கெடுத்த தன் துணையை எதுக்கும் எதிர்ப்பார்க்காமல் துள்ளலாக தூக்கி நிறுத்துகிறாயே அதுவும் சக்தி தான்!

தூக்கம் மறந்தாலும் துணையாய் நிற்கும் பெண்மையே பெரும் சக்தி தான் ..!

எத்தனை இடர்கள் கடந்தும் மலர்ந்த பெண்மை தான் இன்றளவும் பலரின் தலைதட்டலுக்கு சிக்குண்டாலும் சில்லென்ற மழையாகவே மலர்கிறதே நிமிடம் மாறாமல் ...!

பிறரின் முன் வாழ்ந்துக்காட்ட துணிந்த நொடி பல அவமானத்தில் பிறந்த புத்துயிர் ..!
பல வேடிக்கை மனிதர்களைப் போல் வாழாமல் ..பலரை வேடிக்கை பார்க்கும்படி 
வாழச்செய்த நிமிடம்!
பெண்ணானவள் பெரும் சக்தியாய் மாறுகிறாள் ..!
பொன்னைப் பார்க்கும் உலகத்திடம் முதிர் வயதிலும் கண்ணியத்துடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சக்தியாகிறாள் பெண் பெண்ணாகத்தான் ..!  என்றும் இன்றும் அவளே சக்தி தான் ..!

           நன்றி ..!
 இனிய மகளிர் தின வாழ்த்துகள்!!
  ஸ்டெல்லாமேரி எம் ஜே
  புதுவை 9

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>