மகாத்மா காந்தி அஞ்சல்தலை கண்காட்சியில் வென்றோருக்கு திருச்சி அஞ்சல் துறை தலைவர் பாராட்டு

......................................................

Posted on :09 February ,2019 18:51:45
News Image

 மகாத்மா காந்தி அஞ்சல்தலை கண்காட்சியில் வென்றோருக்கு  திருச்சி அஞ்சல் துறை தலைவர் பாராட்டு

புதுச்சேரியில் மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாள் ஆண்டு விழாவையொட்டி நடந்த மாநில அளவிலான போட்டியில் வென்றோருக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு பாராட்டினார். 

மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள் ஆண்டுவிழாவையொட்டி மாநில அளவிலான மகாத்மா காந்தி தபால்தலை கண்காட்சி (காந்தி பெக்ஸ் 2019) புதுச்சேரியில் நடைபெற்றது. காந்தி பெக்ஸ் 2019 கண்காட்சியில் இந்திய அஞ்சல் துறை மற்றும் உலக நாடுகள் வெளியிட்ட பொது பயன்பாடு நினைவு அஞ்சல் தலைகள் மினியேச்சர் செட்டநட், முதல் நாள் அஞ்சல் உறைகள் ,சிறப்பு அஞ்சல் உறைகளை கொண்டு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு ,உப்பு சத்தியாகிரகம் ,தண்டி யாத்திரை ,சுதந்திரப் போராட்டம் என பல்வேறு நிகழ்வுகளை அஞ்சல்தலை மூலம் காட்சிப்படுத்தி இருந்தார்கள். இக்கண்காட்சியில் சிறப்பாக காட்சிப் படுத்தியவர்களை தேர்வு செய்து தமிழ்நாடு முதன்மைஅஞ்சல் துறை தலைவர் சம்பத், பாண்டிச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் உள்ளிட்டோர்  பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலத்தில் மதன், தாமோதரன் ,கார்த்தி, சதீஷ் பாபு, கீர்த்தனா  வெள்ளிப்பதக்கமும்,  விஜயகுமார் ,சித்ரா, சுந்தர்ராஜன்,  சுந்தர அறவாழி வெண்கலப்பதக்கம் பெற்றனர் . பள்ளி அளவில் எஸ் பி ஐ ஒ ஏ பள்ளி  வென்ற சிறப்பு பரிசு மற்றும் பதக்கத்தினை திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் சங்க செயலர் ரகுபதி பள்ளியின் சார்பாக பெற்றுக்கொண்டார்.  ஷர்மா டிப்ளமோ சான்றிதழ் பெற்றார். முதல் நாள் நிகழ்வில் நடைபெற்ற  ஓவியப் போட்டியில் பங்கு கொண்ட பண்ருட்டி ஜான் டூவே மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தக்க்ஷிகாவின் ஓவியம் முதல் பரிசினைப் பெற்றது.            அந்த ஓவியத்தினை மூன்றாம் நாள் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சிறப்பு உறையாக வெளியிட்டனர்.

பதக்கம் பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளர்களை திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்அம்பேஷ் உப்மன்யூ நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>