திருச்சி மாவட்ட சாலையில் வாகனம் செல்ல வேண்டிய வேகம் எவ்வளவு தெரியுமா...?

......................................................

Posted on :05 February ,2019 12:01:48
News Image

திருச்சி மாவட்ட சாலையில் வாகனம் செல்ல வேண்டிய வேகம் எவ்வளவு தெரியுமா...?

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிச்செல்ல வேண்டிய வேகம் எவ்வளவு தெரியுமா...?

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் பிப்ரவரி 4 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை தமிழகத்தில் கடைபிடிக்க அரசு அறிவித்துள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, விபத்தில்லாத , விபத்து குறைந்த 3 மாவட்டங்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைக்காக அரசு ரூ. 65 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை விபத்து ஏற்படாமல் இருக்க திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலையில் வாகனம் செல்ல வேண்டிய வேகம் அளவு நிர்ணயம் செய்து மாவட்ட கலெக்டர் ராசாமணி 24. 11. 2017 ம் தேதி திருச்சி மாவட்ட அரசிதழில்( கெஜட் ) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, என்ஹெச் 45 சென்னை _ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 80 கிமீ, என்ஹெச் 45 திருச்சி _ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 80 கிமீ, என்ஹெச் 45 பி திருச்சி _ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 80 கிமீ, என்ஹெச் 67 துவாக்குடி _ புதுக்குடி 80 கிமீ, என்ஹெச் 67 பழைய பால்பண்ணை_ துவாக்குடி 60 கிமீ, என்ஹெச் 67 பெல் _ கணேசா ரவுண்டானா 40 கிமீ வேகத்தில் செல்லலாம். 

இதேபோன்று எஸ்ஹெச் 71 எ மணப்பாறை _ துவரங்குறிச்சி மாநில நெடுஞ்சாலையில் 60 கிமீ, மணப்பாறை, பொய்கைப்பட்டி, பன்னாங்கொம்பு, இடையாப்பட்டி, புத்தாநத்தம், கல்லக்கம்பட்டி, காரைப்பட்டி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை, துவரங்குறிச்சி 30 கிமீ, கல்பாளையத்துப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி,அழகம்பட்டி, கருமலை ஆகிய இடங்களில் 40 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். 

எஸ்ஹெச் 161 நாமக்கல் _ கண்ணனூர் மாநில நெடுஞ்சாலையில் 60 கிமீ, தா.பேட்டை 30 கிமீ, தாதம்பட்டி, தேவரப்பம்பட்டி, க.பாளையம் பிரிவு, பிரிவு சாலை ஆகிய இடங்களில் 40 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். 

எஸ்ஹெச் 142 துறையூர் _ பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் 60 கிமீ, துறையூர் நகரம், அடிவாரம், நாகலாபுரம், அடைக்கம்பட்டி 30 கிமீ, துறையூர் புறவழிச்சாலை, கிழக்குவாடி ஆகிய இடங்களில் 40 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். 

எஸ்ஹெச்யு 153 நாகப்பட்டினம் _ கூடலூர் _ மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 60 கிமீ, திருச்சி _ திண்டுக்கல் வரை மாநில நெடுஞ்சாலையில் 40 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் உள்ளது. 

உங்கள் வாகனங்கள் வேகமாக ஓட்டி வந்ததாக போக்குவரத்து போலீசார் அபராதம் வாங்குவது ஏன் என்பது இப்போது புரிந்து இருக்கும். 

இந்த வேகத்தில் போனால் விபத்து நடக்காது. கவனக்குறைவால் நடந்தாலும் உசுரு போகாமல் இருக்கும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தில் மட்டுமல்ல அனைத்து நாளிலும் வாகனங்களில் குறிப்பிட்ட வேகத்தில் சென்று விபத்து தவிர்க்க அனைவரும் உறுதி ஏற்போம். 


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>