ரூ 60 லட்சத்தில் புதுப்பித்த திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

......................................................

Posted on :13 January ,2019 13:41:11
News Image

ரூ 60 லட்சத்தில் புதுப்பித்த திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்  சேவை தொடக்கம் 

வாரத்தில் 2 நாட்கள் செல்லும் திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ்    ரயில் ரூ 60 லட்சத்தில் புதுப்பித்து 11 ம் தேதி முதல் சேவையை தொடங்கியது.  நீண்ட தூரத்திற்கு செல்லும் பழைய எக்ஸ்பிரஸ்-மெயில் ரயில்களின் நிலையை மேம்படுத்திட ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. இந்த மேம்படுத்தும் முயற்சிக்கு ‘திட்டக்கருவி’ என பெயரிடப்பட்டது. அதன்படி, திருச்சியில் இருந்து வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்:12663/64) மாலை 4.20 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு புறப்பட்டு செல்லும். 

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ரூ.60 லட்சம் செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. இந்த ரயிலில்   ஏசி வசதி -5, படுக்கை வசதி -14, முன்பதிவில்லா வசதி-2 , இதர பயன்பாட்டுக்கு 2 என மொத்தம் 23 பெட்டிகள் இணைப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் முதன் முதலாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மற்றும் கேரேஜ் ஒர்க்ஸ் பணிமனை ஆகிய 3 இடங்களில் புதுப்பிக்கும் பணி நடந்தது. அதில் ரயில் பெட்டிகளின் அனைத்து தரைத்தளம், கழிவறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் எல்இடி விளக்குகள், துருப்பிடிக்காத இரும்பு பொருட்களிலும் ஹைட்ரோபோபிக் பூச்சு செய்யப்பட்டது. பயணிகளின் சேவை மற்றும் கோரிக்கைக்காக ‘வாஷ்ரூம்’ அருகே உதவிக்கு அழைக்க ரயில்வே எண் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பயணிகள் அந்த எண்ணிற்கு குறுந்தகவல்(எஸ்எம்எஸ்) அனுப்பினால் பணியாள் உடனடியாக அந்த பெட்டிக்கு வந்து விடுவார். மேலும் அனைத்து ரயில் பெட்டிகளும் வெளிப்புறமாக நவீன முறையில் பெயிண்ட் அடித்து புதுப்பொலிவாக மாற்றப்பட்டன. இந்த ரயிலில் மேம்படுத்தப்பட்ட புனரமைப்பு பணிகள் முடிந்து 11 ம் தேதி பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து 11 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.20 மணிக்கு ஹவுரா நோக்கி புறப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ரயில்  பெட்டிகளில்  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள், இந்த ரயிலை வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கேல், விஜயவாடா, எளுரு, ராஜமுந்திரி, விளைநகரம், பெர்காம்பூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பாட்ரக், பலசூர், ஹரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று ஹவுரா சென்றடையும்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>