தசை சிதைவு மற்றும் பக்கவாத நோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாருடன் சக்கர நாற்காலி விண்ணப்பிக்க திருச்சி கலெக்டர் அறிவிப்பு

......................................................

Posted on :07 January ,2019 17:07:10
News Image

தசை சிதைவு மற்றும் பக்கவாத நோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாருடன்  சக்கர நாற்காலி விண்ணப்பிக்க திருச்சி கலெக்டர் அறிவிப்பு 

தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு செய்துள்ளார். 

மோட்டார் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி பெறுவதற்கு தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாத நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கீழ் பயன்பெற ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கு 60 வயதிற்கு மிகாமலும், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 55 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் மேற்கண்ட வகையச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராகவும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.

எனவே, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மேற்காணும் தகுதிகளை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மாற்றுத்திறனாளி புகைப்படம், பணிபுரிபவர்களாக இருந்தால் பணிச்சான்று, பயில்பவராக இருந்தால் கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற கல்வி சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் ,கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி -1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431-2412590 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அவரது அறிவிப்பில் உள்ளது. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>