Ad Banner

திருச்சி பாஜக நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய பிரதமர் மோடி

......................................................

Posted on :24 December ,2018 10:58:06
News Image

எம் பி தேர்தலுக்காக திருச்சியில் பாஜக நிர்வாகிகளிடம்  வீடியோ கான்பிரன்சிங்கில் பிரதமர் மோடி பேசினார். 

எம் பி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.பாஜக 'என் ஓட்டுச்சாவடி வலுவான ஓட்டுச்சாவடி' என்ற அடிப்படையில் ஓட்டுச்சாவடி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் பேசும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 10 எம் பி தொகுதி ஓட்டுச்சாவடி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

திருச்சி, திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை மற்றும் மதுரை  ஆகிய 6 எம் பி தொகுதிகளின் பாஜக ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் இன்று நடந்தது. இதில் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வீடியோ கான்பிரன்ஸ் கலந்துரையாடல் ஆக்ஸ்போர்ட் இன்ஜினியரிங் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: 

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ்  தங்களை காப்பாற்றிக் கொள்ளவே கூட்டணி அமைத்துள்ளனர். பாஜகவின் கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் இலங்கை ராணுவத்தினரால் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. 27 பேரை துாக்கிலிருந்து காப்பாற்றி மீட்டுள்ளோம். ஆனால் கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்  ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாம். இப்பிரச்னைக்கு பின்னரும் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து தான் திமுக விலகியது. பாஜக ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. இவ்வாறு மோடி பேசினார். 

நிகழ்ச்சியில், திருச்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர், 2018ம் ஆண்டு பாஜகவுக்கு எப்படி அமைந்தது என்று பிரதமரிடம் கேட்டார். அதற்கு  மோடி, 2018 ம் ஆண்டின் இறுதிக்கு வந்துள்ளோம். இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு உன்னத ஆண்டாக நம்மால் பார்க்கப்படுகிறது. புதிய பாரதம் படைப்போம் என்று, 2018 ல் தான் முடிவெடுத்தோம். இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க இந்த ஆண்டு தான் அதிகமான திட்டங்களை செயல்படுத்தினோம். 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும். சுகாதாரத்தில் 38 சதவீதம் என்ற நிலையிலிருந்து 95 சதவீதம் என்ற மேன்மை நிலையை அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு தான் இந்தியாவை அறிவித்துள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி, இலவச காஸ் இணைப்பு திட்டங்கள் மக்களை வெகுவாக சென்றடைந்துள்ளது. பொருளாதார குறியீட்டில் 100லிருந்து 77 சதவீதம் என்ற மிகப்பெரிய சாதனையை இந்த ஆண்டு தான் எட்டியுள்ளோம். பாஜக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தான் உள்ளது. மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு தினம், ஒற்றுமையை வலியுறுத்திய சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை, சுபாஷ் சந்திரபோசுக்கு பார்லிமென்டில் கவுரவம் என்று பல்வேறு சாதனைகள் இந்த ஆண்டில் தான் படைக்கப்பட்டது. மொத்தத்தில் 2018ம் ஆண்டு பாஜக அரசால் இந்தியாவின் வளர்ச்சிக்கு உன்னதமான ஆண்டாக திகழ்ந்தது என்றே கூறலாம் என்று தெரிவித்தார். 

Latest News

மாநில அளவிலான அறிவியல், கணித,..

தீபாவளி நினைவுகள் –..

ஆழ்குழாய் குழியில் விழுந்த..

பசுமை பட்டாசுகளுடன்..

More >>

Events Near You

- Trichy

- Trichy

Azadi Champions of - Trichy

College Festival / - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>