முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு 7 நாள் துக்கம்

......................................................

Posted on :31 August ,2020 20:25:03
News Image

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு 7 நாள் துக்கம் 

www.livetrichy.com 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் கடந்த சில நாளாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 15 நாளுக்கு மேலாக கோமா நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் பிரணாப் முகர்ஜி இன்று மாலை உயிர் பிரிந்ததை உறுதி செய்து முறைப்படி அறிவிப்பு வெளியானது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவர் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்து திறம்பட செயலாற்றியுள்ளார். ஜனாதிபதியாக இவர் பொறுப்பு வகித்த போது நாட்டின் ஸ்திரத்தன்மை வலுப்படுத்த பணியாற்றினார். பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு மத்திய அரசு ஏழு நாள் துக்கம் அனுஷ்டிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரதரத்னா உள்பட உயரிய விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், www.livetrichy.com, LiveTrichy YouTube Channel சார்பில் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். 


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>