திருச்சி ஆவின் பொருட்கள் விற்பனையாளராக வாய்ப்பு

......................................................

Posted on :30 May ,2020 07:34:40
News Image

திருச்சி ஆவின் பொருட்கள் விற்பனையாளராக வாய்ப்பு 

www.livetrichy.com 

திருச்சி ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கலெக்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலில் இருந்து பதப்படுத்திய பாலை பல்வேறு வகைப்படுத்தி பாக்கெட்டில் விற்பனைக்கு அனுப்பி வருகிறது. பால் உப பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் நகர்ப்புற முகவர்களுக்கு 6 சதவீதம், திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகள், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அனைத்து பகுதி முகவர்களுக்கு 7 சதவீதம் என மாதாந்திர விற்பனை தொகையில் கமிஷன் வழங்கப்படும். பால் உப பொருட்களுக்கு மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு நிர்ணயம் செய்துள்ள நிகர லாபத்தில் விற்பனை செய்யலாம்.

திருச்சி ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உப பொருட்களை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்ய ஒரு தாலுகாவுக்கு ஒரு மொத்த விற்பனையாளர், அனைத்து மாவட்ட பகுதியில் சில்லரை விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சொந்த இடம், வாடகை இடம் வைத்துள்ள பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 0431 _ 2333001 என்ற எண்ணிலும், 99423 57209, 99943 14559, 95437 55850, 97893 50372, 96598 43553 ஆகிய மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.livetrichy.com 


Latest News

ஜெ.அன்பழகன் மறைவு திமுக..

துறையூர் கோட்ட மின்வாரிய..

திருச்சி ஆவின் பொருட்கள்..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>