திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 1.78 கோடி கடனுதவி

......................................................

Posted on :28 May ,2020 08:14:34
News Image

திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 1.78 கோடி கடனுதவி 

www.livetrichy.com 

திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி உப்பிலியபுரம், பெரம்பலூர், அரியலூர் கிளையில் ரூ ஒரு கோடி 78 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ. ஆர். காளியப்பன் தலைமை வகித்தார். வங்கி துணை தலைவர் சேனை செல்வம், மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, உதவி பொது மேலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உப்பிலியபுரம் கிளையில் ரூ. ஒரு கோடி 8 லட்சத்து 30 ஆயிரம், பெரம்பலூர் கிளையில் ரூ. 30 லட்சத்து 75 ஆயிரம், அரியலூர் கிளையில் ரூ. 49 ஆயிரத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ. ஒரு கோடி 78 லட்சத்து 19 ஆயிரம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி தனித்தனியாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடனுதவி வழங்கி திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ. ஆர். காளியப்பன் பேசியதாவது : கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், தமிழக மக்களின் நலிந்த வாழ்வாதாரம் மீட்கவும் மாண்புமிகு அம்மா அரசில் தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி கோவிட்19 சிறப்பு கடன் வழங்கும் முகாமை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மிக குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு முன்னோடியாக திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு மாநிலத்தில் சிறந்த வங்கிக்கான பரிசு பெற்றுள்ளது. இதற்காக வங்கி மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அனைத்து கிளை மேலாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். வங்கியில் கடனுதவி பெற்று குறித்த காலத்தில் திரும்பி செலுத்தி மீண்டும் கடனுதவி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.  

உப்பிலியபுரம் கிளையில் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பேரூர் கழக செயலாளர்கள் ராஜாங்கம், ராஜேந்திரன், வழக்கறிஞர் அத்தியப்பன், கொப்பம்பட்டி ராஜேந்திரன், புதுப்பட்டி தர்மராஜ், கிளை மேலாளர் பால்ராஜ், துறையூர் கள மேலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பெரம்பலூர் கிளையில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர், எம்எல்ஏ ஆர். டி. ராமச்சந்திரன், எம்எல்ஏ தமிழ்செல்வன், கூட்டுறவு ஒன்றிய செயலாளர் கர்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அரியலூர் கிளையில் அரசு கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த போது துறையூர் கிளையில் பார்வையிட்டு மேலாளர் மணிமாறன் மற்றும் அலுவலர்களிடம் தலைவர், மேலாண்மை இயக்குநர் ஆலோசனை வழங்கினர்.              www.livetrichy.com 

கடனுதவி வழங்கி தலைவர் பேசும் வீடியோவை காண கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.  https://youtu.be/vCqGPHMo82E

Latest News

ஜெ.அன்பழகன் மறைவு திமுக..

துறையூர் கோட்ட மின்வாரிய..

திருச்சி ஆவின் பொருட்கள்..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>