என்சிசி தங்கப்பதக்கம் வென்ற துறையூர் மாணவி

......................................................

Posted on :07 February ,2020 18:23:24
News Image

என்சிசி தங்கப்பதக்கம் வென்ற துறையூர் மாணவி

குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியிடம் என்சிசி பதக்கம் வென்ற துறையூர் மாணவி ரேஷ்மா தனது கல்லூரிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இந்திய ராணுவம் மற்றும் விதிகள் குறித்து மாணவ மாணவிகள் அறிந்து கொள்ள தேசிய மாணவர் படை( என்சிசி) செயல்பட்டு வருகிறது. இதில் சிறப்பு பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்ற துறையூரை சேர்ந்த திருச்சி கல்லூரியில் படிக்கும் மாணவி ரேஷ்மாவுக்கு டில்லியில் பிரதமர் மோடி பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

தேசிய மாணவர் படை  (என்சிசி) அணி வகுப்பு குடியரசு தின விழாவில்  டில்லி கரியப்பா மைதானத்தில் நடந்தது. இதில் சிறப்பு பார்வையாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். அணி வகுப்பினை பார்வையிட்ட பிரதமர் மோடி  என்சிசி படைப்பிரிவில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கினார். இதில் சிறந்த சீனியர் விங் (விமானப்படை) பிரிவில் துறையூரை சேர்ந்த திருச்சி கல்லூரியில் படிக்கும் மாணவி ரேஷ்மா தங்கப்பதக்கம் வென்று கல்லூரிக்கும்,  நாட்டுக்கும் பெருமை சேர்த்தார். 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் ரேஷ்மா. தந்தை ரவிச்சந்திரன் ராணுவத்தில் பணிபுரிகிறார். தாய் மாரியம்மாள் தனது மகள் படிப்புக்காக திருச்சியில் குடியிருந்து வருகிறார். 

தந்தையுடைய அறிவுரையால் என்சிசியில் சேர்ந்த ரேஷ்மா இன்று தமிழகத்திற்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தமிழகம், புதுவை, அந்தமான் நிக்கோபர் தீவுகளின் பிரதிநிதியாக ரேஷ்மா பங்கேற்றார். பிரதமர் மோடி ரேஷ்மாவை வாழ்த்தி அவருக்கு தங்கப் பதக்கத்தை வழங்கினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்  பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பயின்று வருகிறார் ரேஷ்மா.

திருச்சி வந்த ரேஷ்மா இது குறித்து கூறியதாவது:  என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது. என்சிசி தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை அது நிறைவேறியது. கடின உழைப்பால் தான் இந்த இலக்கை அடைய முடிந்தது. என்னுடைய பயிற்சியாளர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். திருச்சி பகுதியில் இருக்கும் குழுவினருடன் போட்டியிட்டு தேர்வான பிறகு தமிழகத்தில் இருந்து வந்த 6 குழுக்களுடன் போட்டியிட்டு தேர்வானேன். பிறகு தேசிய அளவில் இந்த வெற்றியை பெற்றுள்ளேன். இதற்கு இண்டெர்-குரூப் போட்டிகளும் இருந்தன. அதனை க்ளியர் செய்த பிறகு எழுத்துத் தேர்வு, குரூப் டிஸ்கசன், இண்டெர்வியூ, மற்றும் ட்ரில், ஃபயரிங் போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றேன். என்சிசி தான் எனக்குள் இருக்கும்  திறமைகளை வெளிக் கொண்டு வந்தது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏர்ஃபோர்ஸில் பணிபுரிய விருப்பம் உள்ளது என தெரிவித்தார். 


Latest News

ஒஎன்ஜிசி கல்வி உதவித்தொகை..

பேக்கேஜிங் தொழில் பயிற்சி..

சிவராத்திரி பூஜை தா.பேட்டை..

சிவில் சர்வீஸ், வன பணி தேர்வு..

More >>

Events Near You

தன்னம்பிக்கை - Trichy

Inter College - Thuraiyur

International - Trichy

தியாகராஜர் - Thuraiyur

நேரு - Trichy

அரசு - Thuraiyur

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>